பக்கம்:பர்மா ரமணி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க, வாழ்க ! 219. என் வளர்ப்புத் தந்தையும் என் சிநேகிதன் சுந்தரத்தின் தந்தையும் சேர்ந்து நீங்கள் இங்கு வந்து சில காடகங் களை கடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிருர்கள். எல்லாச் செலவையும் அவர்கள் இருவருமே ஏற் றுக் கொள்வார்கள். அவசியம் நீங்கள் இங்கு வரவேண்டும். நீங்கள் இங்கு வந்தால் ஒருவரை ஒருவர் சந்திக்க வழி யுண்டு. அத்துடன் இங்குள்ள தமிழ் நாட்டுக் குழந்தை களும், பெரியவர்களும் நம் சபா நாடகங்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களது வேண்டு கோளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்: என்று எழுதின்ை. முதலாளி மோகனரங்கத்துக்கு வெகு நாட்களா கவே ஒர் ஆசை உண்டு. கடல் கடந்து சென்று காட கங்கள் கடத்திக் காட்டவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ரமணியின் கடிதத்தைக் கண்டதும் மோகன ரங்கத்துக்கு அளவில்லாத ஆனந்தம். உடனேயே பர்மா புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல் லாம் செய்யும்படி சொன்னுர். பாஸ்போர்ட் எடுப்பதற்கும் மற்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கும் சரியாக இரண்டு மாதங்களாயின. மூன் ருவது மாத ஆரம்பத்தில் சபா பர்மாவுக்குப் புறப்பட் டது. சபாவிலுள்ள சிறுவர்களுக்கு ஒரே ஆனந்தம். கடல் கடந்து அக்கிய நாடான பர்மா தேசத்துக்குத் தாங்கள் போகப் போகிருேம் என்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. பர்மா வந்ததும் மதுரகாயகம் முதல் காரியமாக ரமணியைப் பார்க்கத்தான் விரும்பினர். ஆம், கெடு காட்களாகப் பிரிந்திருந்ததால் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/225&oldid=808106" இலிருந்து மீள்விக்கப்பட்டது