பக்கம்:பர்மா ரமணி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 18 பர்மா ரமணி தையாக இருந்த எனக்கு ஆறு மாத காலம் ஆதர வளித்து, அன்போடு வளர்த்துவந்த சென்னை பூநீ முருகன் பால நாடக சபா மானேஜர் மதுரகாயகம் அவர்களுக்கு-சமர்ப்பணம் ” என்று அச்சிடப்பட் டிருக்தது. - இதைக் கண்டதும் மதுரகாயகம், ஆ! என் ரமணி பல்லவா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிருன் !” என்று கூறிக்கொண்டே தம் இடத்தைவிட்டு எழுந் தார். துள்ளிக் குதித்துக்கொண்டே முதலாளி மோகனரங்கத்திடம் ஒடிஞர். அந்தப் புத்தகத்தைக் காட்டி விஷயத்தைக் கூறினர். அவருக்கு ஒரே ஆனந் தம் உடனே அவர், மதுரநாயகம் ரமணியின் விலாசம் இதில் இல்லையே ஆலுைம் பரவாயில்லை. இதில் பதிப்பகத்தின் விலாசம் இருக்கிறது. உடனே அந்த விலாசத்துக்கு ஒரு தந்தி கொடுப்போம். ரமணியை விரைவில் இங்கு வரவழைக்க வேண்டும் : என்ருர், . அன்றே தந்தி கொடுத்தார்கள். ரமணியும் பதில் தந்தி கொடுத்து, ஒரு நீண்ட கடிதமும் எழுதி அனுப் பினுன், அந்தக் கடிதத்தில், கடந்தவற்றை யெல்லாம் விவரமாக எழுதிவிட்டு, தந்தியில் கண்டபடி உடனே புறப்பட்டு வரவேண்டும் ; உங்களை யெல்லாம் காண வேண்டும் என்றுதான் என் மனம் துடிதுடிக்கிறது. ஆலுைம், இங்குள்ளவர்களுக்கு இப்போது என்னைத் தனியாக அனுப்ப மனமில்லை. அத்துடன், என் கதை யைக் கேட்க வரும் குழந்தைகளும் என்னைக் காணுமல் ஏங்கிப் போவார்கள். ஆலுைம், இதற்கு ஒரு கல்ல வழி இருக்கிறது. பர்மாவில் தமிழ் நாடகம் கடப்பதே அபூர்வம். அதிலும் குழந்தைகளே நடிக்கும் நாடகத் துக்கு அபாரமான வரவேற்பு இருக்கும். ஆகையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/224&oldid=808104" இலிருந்து மீள்விக்கப்பட்டது