பக்கம்:பர்மா ரமணி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க, வாழ்க ! 2重?r வந்தார்கள். அந்த முடிவுப்படி இருவரும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தார்கள். அதன் பெயர் 'ரமணி சுந்தர் பதிப் பகம். அதிலிருந்து ரமணியின் கதைகளை யெல்லாம் புத்தகங்களாக வெளியிடுவதென்று தீர்மானித்தார்கள். முதல் புத்தகமாக ரமனியின் புகழ்பெற்ற கோமாளிக் குப்பன் வெளிவந்தது. ஆல்ை, ரமணி பர்மாவில் இருக்கிருன் என்பதும் முதலில் கதாசிரியனுக இருந்து, இப்போது புத்தக ஆசிரியனுகி விட்டான் என்பதும் நாடக சபா மானேஜர் மதுரகாயகத்துக்குத் தெரியுமா ? அவர் அடிக்கடி ரமணியை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக் தார். இப்போது ரமணி எங்கே இருக்கிருைே எப்படி இருக்கிருனுே!’ என்பதே அவரது கவலை. அன்று காலையில் நாடக சபாவிலுள்ள தம்முடைய அறையில் மதுரகாயகம் கவலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்னுல் சில கடிதங்களைக் கொண்டுவந்து வைத்தான், ஆபீஸ் பையன் சிங்காரம். அந்தக் கடிதங்களுடன் உறை. யோடு கூடிய ஒரு புத்தகம் இருந்தது. உறையை அகற்றிவிட்டுப் புத்தகத்தை எடுத்துப் பெயரைப் பார்த் தார். கோமாளிக் குப்பன் என்ற பெயரைக் கண்ட தும் அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வேடிக்கை யான பெயரா யிருக்கிறதே !’ என்று கூறிக்கொண்டே உள்ளே பார்த்தார். முதல் பக்கத்தில், எழுதியவர்பர்மா ரமணி’ என்று இருந்தது. உடனே அவர், என்ன ! பர்மா ரமணியா அது யார் ?” என்று ஆச் சரியத்தோடு அடுத்த பக்கத்தைப் புரட்டினர். அங்கே ஒரு கட்டம் கட்டி, அந்தக் கட்டத்தின் கடுவே அணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/223&oldid=808102" இலிருந்து மீள்விக்கப்பட்டது