பக்கம்:பர்மா ரமணி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பர்மா ரமணி பேசிக் கொண்டார்கள். அதனல், ரமணியின் புகழ் இன்னும் அதிகமாயிற்று. அவனது கதையைக் கேட்க மாக்தலே நகரத்துக்குழந்தைகள் எல்லோருமே திரண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். சித்தப்பா இறந்து போனதை நினைத்துச் சில சம யம் ரமணி வருத்தப்படுவான். ஆலுைம், கூட்டம் கூட்டமாக வரும் குழந்தைகளைக் காணும்போது அந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் ஒடிமறைந்துவிடும். குஷியாக அவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்துவிடு வான். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டுக் குழந்தைகள் ஆனந்தப்படுவார்கள். பெரியவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ரமணி சொல்லும் கதைகளையெல்லாம் பத்திரிகை களுக்கு எழுதி அனுப்பினுல், கிச்சயம் வெளியிடுவார் கள் என்று அங்கு வரும் சில பெரியவர்கள் அடிக்கடி சொல்லி வந்தார்கள். சுந்தரத்தின் அப்பா தாமோதர மும் ரமணியிடம் இதைச் சொன்னுர். சொன்னதோ டல்ல; கட்டாயப்படுத்தி எழுதி அனுப்பவும் செய்தார். பர்மாவிலுள்ள சில தமிழ்ப் பத்திரிகாசிரியர்கள் ரமணி யின் கதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள்.அவ னுடைய கற்பனைத் திறத்தைப் போற்றினர்கள். தங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கமளித் தார்கள். மூன்று மாதங்களில் சுமார் முப்பது கதை களுக்கு மேல் பத்திரிகைகளில் வெளி வந்துவிட்டன ! எல்லாக் கதைகளுமே அற்புதமான கதைகள். அந்தக் கதைகளைப் பாராட்டித் தினமும் பத்திரிகாசிரியர்களுக் குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. ரமணிக்குப் பெயரும் புகழும் பெருகி வருவதைக் கண்ட சிற்சபேசனும், தாமோதரமும் ஒரு முடிவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/222&oldid=808100" இலிருந்து மீள்விக்கப்பட்டது