பக்கம்:பர்மா ரமணி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க, வாழ்க ! 215 டோமா என்று சரிபார்த்துக் கொண்டார்கள். அப் போதுதான் சுப்பையாவைக் காணுேம் என்பது தெரிக் தது. இது வரையிலும் ஒரே அவசரத்திலும் குழப்பத்தி லும் இருந்ததால், சுப்பையா தங்களோடு இருக்கிருளு இல்லையா என்றுகூட அவர்கள் பார்க்கவில்லை : பார்க்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட சுப்பையாவைக் காணுேம் என்று தெரிந்த பிறகும், அவர்கள் அவன் மேல் சந்தேகப்படவில்லை. சுப்பையா கெட்டிக்காரன். ஒளிந்து ஒளிந்து அவர்கள் பின்ன லேயே போய் விஷயத்தைத் தெரிந்துகொண்டு வந்து விடுவான்’ என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத் துக்கொண்டு குகைக்குச் சென்ருன் தலைவன். ஆணுல், அந்தக் குகையில் அவர்கள் சிறிது கேரம் கூட இருக்கவில்லை. இனி காம் இந்தக் குகையில் இருந்தால் ஆபத்து கிச்சயம் ! சுந்தரத்தையும் ரமணி யையும் துக்கிச் சென்றவன் கம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்!” என்று எண்ணி அவர்கள் வேருெரு குகைக்குப் பனப்பெட்டி, சாமான்கள் முதலிய வற்றுடன் புறப்பட்டுவிட்டார்கள். ஆல்ை, போலீஸ் காரர்களா விடுவார்கள் ? அவர்கள்தான் அந்தக் குகை யைப் பற்றிச் சுப்பையா மூலமாகத் தெரிந்து வைத் திருந்தார்களே ! ஆயுதம் தாங்கிய ஒரு பெரிய படை யுடன் சப்-இன்ஸ்பெக்டர் புறப்பட்டுச் சென்று அந்தக் குகையை முற்றுகையிட்டார். முரடர்கள் மூவரும் தப்ப வழியில்லாது உடனே போலீஸாரிடம் சரண் அடைந்தார்கள். முரடர் கோஷ்டி பிடிபட்ட செய்தி மாந்தலே நகரில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்ட து. அவர்கள் பிடிபட்டதற்குக் காரணம் ரமணிதான் என்று மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/221&oldid=808098" இலிருந்து மீள்விக்கப்பட்டது