பக்கம்:பர்மா ரமணி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பர்மா ரமணி. மேல், நடக்கவேண்டியதைப் பார்க்க வேண்டாமா? இப்படியே சுமமா உட்கார்ந்திருந்தால், உங்கள் முன்னுல் அந்தப் பேணு தானுக வந்து கிற்குமா? எப் படியாவது அவனைத் தேடிப் பிடித்துப் பேணுவை வாங்கிக்கொண்டு, ஆத்திரம் தீர அவனுக்கு முதுகிலே காலு வைக்க வேண்டாமா? எங்கேயிருந்தாலும் விடாப்பிடியாகத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும்.” - - கமலாதேவி இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போது, அங்கே வந்தார் பக்கத்து வீட்டுப் பாஸ்கரன். ஒசியில் பத்திரிகை படிக்கத் தினமும் காலையில் தவ ருது அவர் அங்கு வக்துவிடுவார் கமலாதேவி சொன்ன கடைசி வாக்கியம் மட்டுமே அவர் காதில் விழுந்தது போலிருக்கிறது. உடனே அவர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமா எதை? உங்கள் காய்க் குட்டி ஜிம்மி காணுமல் போய்விட்டதா?’ என்று அது தாடத்துடன் கேட்டார் . . 'அந்த காய்க்குட்டிக்கு இருக்கும் நன்றிகூட ஆறு மாதமாக இந்த வீட்டிலே வேளா வேளைக்குத் தின்று வளர்ந்த ரமணிக்குக் கிடையாதே! அவன் செய்த வேலையைக் கேளுங்கள். நேற்று சபாவிலே இருந்த பட்டுத்துணியைத் திருடி அவன் அகப்பட்டுக் கொண்டுவிட்டான். ஆகுல், அவன் திருடியிருக்கவே மாட்டான் என்று இவர் முதலாளியிடம் சொன்னராம். முதலாளி என்ன, சாமானியப்பட்டவரா? அவர் ரமணி தான் திருடியிருக்கவேண்டும் என்று முடிவுகட்டி உட னேயே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். பிறகு அவன், இவர் இல்லாத சமயம் பார்த்து இங்கே வந்து மேஜைமேல் இருந்த தங்கப் பேன வையும் திருடிக்கொண்டு ஒடிப் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/41&oldid=808227" இலிருந்து மீள்விக்கப்பட்டது