பக்கம்:பர்மா ரமணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுவைக் காணுேம்! 37

பின்னே, கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு அயலூரி லிருந்தா திருடன் வருவான்? இவனைத் தவிர வேறு யார் எடுத்திருப்பார்கள் ? சம்பளம் கொடுத்த சபாவிலே பட்டுத் துணியைத் திருடினுன் , சாப்பாடு போட்ட வீட்டிலே தங்கப் பேணுவைத் திருடின்ை ! அந்தப் பட்டுத் துணிகூட முப்பது காற்பது ரூபாய்க்குள்ளே தான் இருக்கும் இந்தப் பேணு கிட்டத்தட்ட நூறு ரூபாய் இருக்காதா? அட பாவிப் பையா! அன்னம் இட்ட வீட்டிலே கன்னம் வைத்துவிட்டாயே!” என்று இரைந்து பேசினுள் கமலாதேவி.

மதுரகாயகத்துக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. பேசாமல் தலையை விரல்களால் அழுத் திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். காயைக் கொண்டு வந்து நடுவிட்டிலே வைத்துச் சாப்பாடு போடச் சொன்னிர்களே! வளர்த்த கடா மார்பிலே பாய்வதுபோல், கம்மிடமே அவன் கைவரிசை யைக் காட்டிவிட்டானே! என்று கமலாதேவி மேலும் பேசினுள். மதுரநாயகம் ஏதாவது பதில் சொல்லுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவர் எதுவுமே சொல்லவில்லை. மெளனமாகவே உ ட் க ர் க் து கொண்டிருந்தார். நேற்று ராத்திரி நீங்கள் என்ன சொன்னிர்கள் ? கோன் மேஜை மேல் பேணுவை வைக்கிறேன் ; மனி பர்ஸ்ை வைக்கிறேன். அவன் எதையாவது எடுத் திருக்கிருனு ?’ என்று கேட்டீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்? சரி, அதெல்லாம் போகட்டும். இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/40&oldid=808208" இலிருந்து மீள்விக்கப்பட்டது