பக்கம்:பர்மா ரமணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பர்மா ரமணி சென்ருர். மேஜை மேலிருந்த கடிகாரத்தை எடுத்தார்; கையிலே கட்டிக்கொண்டார். மணிபர்ஸை எடுத்தார் ; சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார். இன்னும் ஏதோ ஒன்றை அவர் எடுக்கப் போனர். ஆனல், அதை அங்கே காணவில்லை ! உடனே சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். அங்கும் இல்லை. ஜன்னல், மேஜை அறை, அலமாரி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டார், அந்த அறை முழுவதும் தேடியும் கிடைக்க வில்லை. உடனே அவர் அளவற்ற ஆச்சரியத்துடன், எங்கே போய்விட்டது என் பேணு தங்கமூடி போட்ட எவர் ஷார்ப் பேணுவைக் காணுேமே!’ என்று இரைந்து சத்தத்தைக் கேட்டதும், அவர் மனைவி கமலாதேவி அங்கே ஒடி வந்தாள். விஷயத்தை அறிந்தாள் உடனே, கல்ல பையனும், கல்ல பையன்! அந்த காச மாய்ப் போனவன்தான் இதையும் எடுத்துக்கொண்டு தொலைந்திருப்பான். கேற்றுச் சாயங்காலம் நீங்கள் இல்லாத சமயம் பார்த்து வந்தானே, இதைத் திருடிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிருன் ! ஐயோ! பேணுவை மட்டும்தான் எடுத்தானே, இன்னும் என்ன என்ன சாமான்களை யெல்லாம் எடுத்திருக்கிருைே !’ என்று திட்டிக்கொண்டே அறையிலிருந்த சாமான்களை யெல்லாம் சரிபார்க்க ஆரம்பித்துவிட்டாள்! பேணுவைக் காணுேம் என்றதுமே மதுரகாயகம் அதிர்ச்சி யடைந்தார். ரமணிதான் அதைத் திருடி யிருக்க வேண்டும் என்று கமலா தேவி சொன்னதும், அவருடைய அதிர்ச்சி இன்னும் அதிகமாகியது! ரமணியா பேணுவைத் திருடியிருப்பான்?' என் ருர் தாழ்ந்த குரலில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/39&oldid=808204" இலிருந்து மீள்விக்கப்பட்டது