பக்கம்:பர்மா ரமணி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுவைக் காணுேம்! ទន முதலியவற்றை மேஜைமேல்தானே வைக்கிறேன் ? அவன் நினைத்திருந்தால் எதை வேண்டுமானுலும் எடுத்திருக்கலாமே!” என்ருர் மதுரநாயகம் - "உங்களுக்குத்தான் ஞாபகமறதி அதிகமாயிற்றே! மணிபர்ஸில் முதலில் எவ்வளவு வைத்தோம் என்பது தெரிந்தால் அல்லவா குறையும்போது எவ்வளவு குறை கிறது என்பது தெரியும்?' என்ருள் கமலா. கமலா, நீ சொன்னதைத்தான் திருப்பித் திருப் பிச் சொல்லுவாய்' - - "ஆமாம், நீங்கள் மட்டும் புதிதாகச் சொல்லுகிறீர் களாக்கும்! அவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன ? நேரமாகிறது, சாப்பிட வாருங்கள்' என்று கூறிவிட்டு அடுக்களைக்குச் சென்ருள் கமலாதேவி. மதுரநாயகம் சாப்பிடும் போதெல்லாம் ரமணி யைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவு துரக்கம்கூட வரவில்லே! எங்கே போயிருப்பான் ? சாப்பிடக் கூட வரவில்லையே! என்ற யோசனையிலே இருந்தார். - மறுநாள் அதிகாலையில் மதுரநாயகம் எழுந்தார். உடனே, ரமணி வழக்கமாகப் படுக்கும் வெளித் திண் 2ணக்கு வந்து பார்த்தார். அங்கே அவன் இல்லை! ‘என்ன ! இரவு சாப்பிட வரவில்லை, படுக்கவும் வர வில்லையே! அவன் ரோஷக்காரயிைற்றே! ஒரு வேளை, தற்கொலே... இதற்குமேல் அவரால் கினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மனக் கலக்கத்துடனே காலே வேலைகளை முடித்துக்கொண்டு சாப்பிட உட் கார்ந்தார். அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு அறைக் குள்ளே சென்ருர், அவசர அவசரமாகச் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார். மேஜை அருகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/38&oldid=808202" இலிருந்து மீள்விக்கப்பட்டது