பக்கம்:பர்மா ரமணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பர்மா ரமணி குவிந்ததும் உனக்குத் தெரியும். அப்படி வந்த நாடகங் களை கான் இரவு வெகுநேரம் வரை படிப்பதும் உனக் குத் தெரியும். இதை அவனும் கவனித்திருக்கிருன் ஒரு நாள்-நீ உன் தாயார் வீட்டுக்குப் போயிருந்த சம யம் என்று கினைக்கிறேன்-அவன் என்னிடம் வந்து, சார், கானும் இந்த நாடகங்களைப் படித்துப் பார்க்க லாமா?’ என்று கேட்டான். சரி என்று கூறி இரண்டு நாடகங்களே அவனிடம் கொடுத்தேன். அந்த இரண் டையும் அவன் படித்துப் பார்த்தான். கடைசியில் அக்த இரண்டிலே ஒன்றை என்னிடம் கொடுத்து: இது கன்ரு யிருக்கிறது. இன்னென்று மோசம் என் மூன். ஏன், அது உனக்குப் பிடிக்கவில்லையா? என்று. கேட்டேன். ஆமாம், பொய் சொல்வது, திருடுவதுஇப்படிப்பட்ட பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் காடகமாகவே இது இருக்கிறது. இதை மேடையில் பார்த்தால் பலர் கெட்டுவிடுவார்களே என்று பயந்து தான் ஒதுக்கிவிட்டேன்’ என்ருன். உடனே கானும் அந்த இரு காடகங்களையும் படித்துப் பார்த்தேன். அவன் சொன்னது முற்றிலும் சரியாகவே இருந்தது. நாடகத்தில்கூடத் தீமையை விரும்பாதவன் ரமணி! அவன திருடியிருப்பான் ? என்று கேட்டார். - " 'இப்போதுதான் புரிகிறது! அதுபோல் திருட்டு நாடகங்களைப் படித்துப் படித்துத்தான் அவனும் திரு டப் பழகியிருக்கிருன் போலிருக்கிறது! தான் மட்டும் தான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் ; மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது எ ன் று. நினைத்துத்தான் அப்படிச் சொல்லி யிருக்கிருன்.” கமலா, வீணுக அவன்மீது குற்றத்தைச் சுமத் தாதே! நான் தினமும் பேணு, கடிகாரம், மணிபர்ஸ்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/37&oldid=808200" இலிருந்து மீள்விக்கப்பட்டது