பக்கம்:பர்மா ரமணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பர்மா ரமணி அக்த நல்ல சமயம் இப்போது வந்திருக்கிறதே! அவர் சும்மா இருப்பாரா ே - எவ்வளவு செல்லமாக வளர்த்தோம் : இப்படி மோசம் செய்துவிட்டானே பாவிப் பையன் !’ என்று அங்கலாய்த்தாள் கமலாதேவி. . ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கான் சொல்லு கிறபடி செய்தால் சீக்கிரம் பேணு கிடைத்துவிடும் உடனே பக்கத்துப் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியது. ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேண்டியது. எங்கிருந்தாலும் அவனை சிண்டைப் பிடித் துக்கொண்டு வந்து விடுவார்கள். மதுரநாயகம் ! ஏன் இப்படிப் பிடித்துவைத்த பிள்ளையார்போல் இரு க் கி ரு ய் ? உடனே எழுந்திரு. ரிப்போர்ட் கொடுத்து விட்டு வரலாம்' என்ருர் பாஸ்கரன். X இதைக் கேட்டதும், இதுவரை மெளனமாயிருந்த மதுரகாயகம், என்ன ! போலீஸிலே கரிப்போர்ட்” கொடுக்கிறதா?’ என்று கேட்டார். - 'பின்னே, பொட்டுக் கடலைக்காரனிடமா எரிப் போர்ட் கொடுப்பது ? என்னப்பா யோசிக்கிருய் ? எழுந்திரு. எனக்கு இந்த டிவிஷன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரைத் தெரியும். ‘ரிப்போர்ட் கொடுத்ததும் அவர் காலா பக்கமும் ஆட்களை அனுப்பி அவனை உடனே பிடித்துவரச் சொல்லுவார். அவன் எங்கே போவான் ? இந்தப் பட்டணத்தில்தானே அந்தப் பேணுவை விற்கவேணும் ?’ என்ருர் பாஸ்கரன். பாஸ்கரன் மதுரநாயகத்தைப் போலீஸ் ஸ்டேஷ லுக்கு அழைத்தபோது மதுரகாயகம் சிறிது தயங்கி னர் . அதைக் கண்டதும் அவர் மனைவி கமலாதேவிக் குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/43&oldid=808231" இலிருந்து மீள்விக்கப்பட்டது