பக்கம்:பர்மா ரமணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுவைக் காணுேம் ! 4} யோசித்து யோசித்துத்தான் இப்படி ஆகிவிட் டது. ரமணி இன்னும் என்ன என்ன எடுத்திருக்கிருன் என்பதுகூட அவனைப் பிடித்தால் தெரிந்துவிடும். இனி அவனைச் சும்மா விடக்கூடாது! நீங்களோ காட கக் கொட்டகைக்குப் போய்விடுகிறீர்கள். இரவு வெகு கேரம் சென்றுதான் திரும்பி வருகிறீர்கள். நீங்கள் இல்லாத சமயம் பார்த்து அவன் வந்து எதையாவது துரக்கிக்கொண்டு ஓடிவிட்டால் நான் என்ன செய்வது? அவனைச் சும்மா விட்டு வைக்கக்கூடாது. ஆபத்துத் தான் ' என்ருள் கமலாதேவி.

மதுரகாயம், பேசாமல் எழுந்திரு. கேரமாகிறது’ என்று கூறி மதுராாயகத்தின் கையைப் பிடித்து இழுத்தார் பாஸ்கரன்.

மதுரகாயகம் அரை மனசுடன் எழுந்து பாஸ்கர ளுேடு சென்ருர், இருவரும் பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷக்குச் சென் ருர்கள். சப்-இன்ஸ்பெக்டரிடம் வி ஷ ய த் ைத விளக்கிக் கூறினர் பாஸ்கரன். காணுமல் போனது எவர்-ஷார்ப் பேணு, தங்க மூடி போட்டது; அடிப்பாகம் கறுப்பு நிறம்; மதிப்பு நூறு ரூபாய் இருக்கும் ; பேணுவின் மேல் சேகர் அன் பளிப்பு என்று எழுதப்பட்டிருக்கும். மலேயாவிலிருந்து சேகர் என்ற உறவினர் அனுப்பியது. அனுப்பி ஒன் றரை வருஷம் இருக்கலாம். சந்தேகப்படும் பையன் பெயர் ரமணி. வயது பதின்மூன்று. மாகிறம். சுமார் காலரை அடி உயரம்." இந்த விவரங்களுடன் ‘ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள் மதுர காயகமும், பாஸ்கரனும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/44&oldid=808233" இலிருந்து மீள்விக்கப்பட்டது