பக்கம்:பர்மா ரமணி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - பர்மா ரமணி அன்று மதுரநாயகம் நாடக சபாவுக்குப் போவ தற்கு முன்பே இந்தச் செய்தி அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. அப்படியால்ை முதலாளிக்கு இது தெரியாமலா இருக்கும்? அவருக்கும் உடனே தெரிந்து விட்டது. எல்லாம் அந்தப் பாஸ்கரன் செய்த வேலை தான் ! o மதுரநாயகம் சபாவுக்குள் வந்து நுழைந்ததுமே, சான்ன மதுரகாயகம் ! அந்தப் பயல் உங்களிடமே தன் வேலையைக் காட்டிவிட்டான் போலிருக்கிறது ! அவன் பரம யோக்கியன் என்று கேற்றுச் சொன்னிர் களே, அந்தப் பரம யோக்கியன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என் பார்களே, அது போலத்தான் அவனும் இருந்திருக் கிருன்" என்று வாய் மூடாமல் பேசலாஞர் முதலாளி. மதுரகாயகம் பதில் எதுவும் கூறவில்லை. தலை யைக் குனிந்தபடி தமது அறைக்குள்ளே சென்ருர். 6. அகப்பட்டுக்கொண்டான் ! மறுகாள் பதினுெரு மணி இருக்கும். முதலாளி யின் பக்கத்திலே இருந்த டெலிபோன் ட்ரிங், ட்ரிங்’ என்று ஒலித்தது. உடனே முதலாளி டெலிபோன் சரிஸிவரைக் கையில் எடுத்தார். - எஹலோ, யார் பேசுகிறது?’ என்று முதலாளி கேட்டார். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாகவும், மானேஜர் மதுரநாயகத்திடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டுமென்றும் பதில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/45&oldid=808235" இலிருந்து மீள்விக்கப்பட்டது