பக்கம்:பர்மா ரமணி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்டுக்கொண்டான் 43 உடனே முதலாளிமோகனரங்கம் ரிலீவரை மேஜை மேல் வைத்துவிட்டு மானேஜர் அறைச்குள் ஒடிஞர். எமதுரகாயகம்! மதுரநாயகம்! உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன்’ வந்திருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் உங்க ள | டு பேசவேண்டுமாம். சீக்கிரம் வாருங்கள்' என்ருர். உடனே மதுரநாயகம் முதலாளி அறைக்குள்ளே வேகமாக வந்தார் முதலாளியும் கூடவே வந்து அருகில் கின்றுகொண்டு அவர் பேசுவதைக் கவனித் தார். - - சப்-இன்ஸ்பெக்டர் மதுநாயகத்திடம் சொன்னது இதுதான். - 'திருட்டுப் போன உங்களுடைய தங்கமுடி போட்ட எவர்-ஷார்ப் பேணு கிடைத்துவிட்டது. திருடின பையன் பேணுவைக் கடையில் விற்கப் போகும்போது அகப்பட்டுக் கொண்டான். அவனு டைய வயது, உயரம், கிறம் எல்லாம் உங்கள் ரிப் போர்ட்டில் உள்ளபடியே இருக்கின்றன. பேணுவிலும், சேகர் அன்பளிப்பு என்று எழுதியிருக்கிறது' என்று இதைக் கேட்டதும் மதுரகாயகம் அட, நன்றி கேட்டவனே !' என்று பல்லேக் கடித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முன்பு கூறியதோடு கிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இன்னுெரு எதிர் பாராத தகவலையும் கூறினர்! அந்தப் பையனிடம் ஒரு கைக் கடிகாரமும் இருக்கிறது. கேட்டால், என் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று புளுகுகிருன். நீங்கள் உடனே வந்தால் எல்லாம் தெரிந்து விடும். பையன் லாக்-அப்"பிலே இருக்கிருன்' என்று கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/46&oldid=808237" இலிருந்து மீள்விக்கப்பட்டது