பக்கம்:பர்மா ரமணி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பர்மா ரமணி மதுரகாயகம் ஆச்சரியத்தோடு ரிஸ்வேரைக் கீழே வைத்துவிட்டு முதலாளி மோகனரங்கத்திடம் சப். இன்ஸ்பெக்டர் கூறியதை அப்படியே அறிவித்தார். அதைக் கேட்டதும், அட டே நாலந்து மாதங் களுக்கு முன்பு காணுமல் போய்விட்டதே என் கைக் கடிகாரம், அதுவாகத்தான் இருக்கவேண்டும். துாங் கும்போது யாரோ எடுத்துவிட்டார்களென்று ஒவ் வொருவராக நாம் சோதனை செய்யவில்லையா? அப் போது எங்கேயோ பத்திரமாக ஒளித்து வைத்திருந்து இப்போது எடுத்துப் போயிருக்கிருன். திருட்டுப் பயல்! இவனைச் சும்மா விடக்கூடாது. உடனே புறப் படுங்கள். கானும் உங்களுடன் வரு கிறே ன்’ என்ருர். எஇப்படி அவன் மோசம் செய்வான் என்று நான் கனவில்கூட கினைக்கவில்லை’ என்று மிகுந்த வருத்தத் தோடு கூறினர் மதுரநாயகம், மானேஜர் மதுரகாயகத்தை அழைத்துக்கொண்டு உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தார் முதலாளி மோகனரங்கம். உடனே அவர் மேஜை மேலிருந்த மணியை அடித்தார். சத்தம் கேட்டதும் மற்ருெரு ஆபீஸ் பையனை அழகிரி உள்ளே ஓடிவந்தான். - "?"・".. 。 டேய் அழகிரி, உடனே போய் டிரைவரிடம் காரை எடுத்து வரச்சொல்” என்று முதலாளி மோகன ரங்கம் உத்தரவு போட்டார். கார் வந்ததும், முதலாளி மோகனரங்கமும், மானேஜர் மதுரகாயகமும் ஏறிக்கொண்டனர். கார் போலீஸ் ஸ்டேஷனை கோக்கிப் புறப்பட்டது. போகும் போது ரமணியைப் பற்றி ஆத்திரம் ஆத்திரமாகப் பேசினர் முதலாளி. ஆல்ை, மதுரநாயகம் அவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/47&oldid=808239" இலிருந்து மீள்விக்கப்பட்டது