பக்கம்:பர்மா ரமணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அவன் ? - 58 விலையாக இருக்கும். இது சிங்கப்பூரில் இருந்தல்லவா வந்திருக்கிறது? என் பெரியப்பா பிள்ளை சேகர் வாங்கி எனக்கு அன்பளிப்பாக அனுப்பி யிருக்கிருர்’ என்று சொன்னீர்கள். இதுவும் உங்களுக்கு கன்ருக கினை வில் இருக்கும். நீங்கள் திருச்சியை விட்டுப் போனது முதல், எனக்கும் அந்த மாதிரி ஒரு பேணு வேண்டு. மென்று தினமும் அம்மாவை கச்சரிக்க ஆரம்பித்தேன். என் தொந்தரவு பொறுக்கமுடியாமல், அம்மா உடனே சேகர் மாமாவுக்கு ஒரு கடிதம் போட்டாள். கடிதம் போட்ட ஒரு மாதத்தில், அங்கிருந்து கப்பலில் வந்த ஒருவர் மூலம் சேகர் மாமா பேனவை அனுப்பி வைத் தார். அது நீங்கள் வைத்திருந்தது போலவே இருக் தது. உங்கள் பேணுவின் மேல் எழுதி யிருந்தது. போலவே அந்தப் பேணுவிலும் சேகர் அன்பளிப்பு என்று எழுதியிருந்தது.” - - ஆனந்தன் இதைக் கூறிக் கொண்டிருக்கும் போதே, முதலாளி மோகனரங்கம் குறுக்கிட்டு, அப் படியால்ை அந்தக் கடிகாரம் எப்படி வந்தது?’ என்று கேட்டார். உடனே ஆனந்தன், அதையும் சொல்லிவிடு கிறேன். நான் எட்டாம் வகுப்புப் பரீட்சை எழுதியிருந் தேன். பரீட்சையில் தேறில்ை, ஒரு கைக்கடிகாரம் வாங்கித் தருவதாக என் அப்பா சொல்லியிருந்தார். கைக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டு. மென்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையில் ஒரு குற்றம் செய்து விட்டேன். அன்று பரீட்சை முடிவை அறிவித்தார்கள். அந்த முடிவுப்படி கான் தேறவில்லை; தோல்வியே அடைந்தேன் ஆலுைம் வீடு சென்ற தும், அப்பாவிடம் உண்மையைக் கூறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/56&oldid=808259" இலிருந்து மீள்விக்கப்பட்டது