பக்கம்:பர்மா ரமணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பர்மா ரமணி கிறுத்தினர். ஆனந்தா, அழாதே! நீ திருச்சியிலிருந்து எப்படி வந்தாய்? பேணுவும் கடிகாரமும் உனக்கு எப்ப டிக் கிடைத்தன? ஒன்றும் புரியவே இல்லையே!” என்று கேட்டார். - இதைக் கேட்டதும் இந்நேரமாக ஒன்றும் புரியா மல் விழித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், "என்ன மிஸ்டர் மதுரகாயகம், உங்களுக்கு இந்தப் பையனை முன்பே தெரியுமா?’ என்று ஆச்சரியத் துடன் கேட்டார். தெரியாமல் என்ன ? இவன் என் சொந்த அக்கா ளுடைய பிள்ளையேதான் !’ என்ருர் மதுரகாயகம். 'அடடே, உங்கள் அக்காள் மகன ?. ஆமாம். திருட்டுப் போன பேணுவும், கடிகாரமும் இவனிடம் எப்படி வந்து சேர்ந்தன ?’ என்று வியப்புடன் கேட்டார் மோகனரங்கம். -

  • அதுதானே தெரியவில்லை!" என்று கூறிவிட்டு அந்தப் பையனைப் பார்த்து, ஏண்டா ஆனந்தா! பேணு வையும் கடிகாரத்தையும் உனக்கு யார் கொடுத் தது உண்மையை ஒளிக்காமல் சொல்” என்ருர் மதுரகாயகம். -

சொல்லுகிறேன், மாமா கேளுங்கள். ஒரு வரு ஷத்துக்கு முன்பு நீங்கள் திருச்சிக்கு-எங்கள் வீட் டுக்கு வந்தபோது, தங்க முடி போட்ட எவர்.ஷார்ப் பேணு ஒன்றைக் கொண்டு வந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அதைப் பார்த்ததும், எனக்கும் இதே போல் ஒரு பேணு வேண்டும் என்று கான் உங்களைக் கேட்டேன். அதற்கு நீங்கள், இது கம் காட்டில் கிடைக்காது. கிடைத்தாலும், யானை விலை, குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/55&oldid=808257" இலிருந்து மீள்விக்கப்பட்டது