பக்கம்:பர்மா ரமணி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அவன் ? 51 அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மதுரகாயக மும் கலங்கிப் போய்விட்டார். முதலாளி மோகனரங்கம், சப்-இன்ஸ்பெக்டர், 753-இவர்கள் எல்லோருக்கும் ஒன் றும் புரியவே இல்லை. சிறிது நேரம் அப்படியே அசை யாமல் திகைத்துப்போய் இருந்தார்கள். பிறகுதான் அந்தப் பையன் பேச ஆரம்பித்தான். மதுரகாயகத்தின் காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டே, :ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! என் இனத் திருடன் என்கிருர்களே! என்று கண்ணிர் விட் டுக் கதறியபடி கூறினன். - உடனே முதலாளி மோகனரங்கம், டேய், நீ திரு டன் இல்லாமலிருக்கலாம். ஆனால், கடிகாரமும் பேணு வும் உனக்கு எப்படிக் கிடைத்தன? அந்த ரமணிப் பயல்தானே உன்னிடம் தந்து விற்கச் சொன்னன் ?” என்று கேட்டுவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, சார், அந்த ரமணிப் பயல் நீங்கள் சொன்ன மாதிரி பெரிய ஆளேதான். எங்கள் கடிகாரத்தையும் பேனு வையும் விற்பதற்கு ஒரு கூட்டாளி சேர்த்துவிட்டான். பார்த்தீர்களா?' என்ருர். உடனே சப்-இன்ஸ்பெக்டர், அப்படியாளுல் இவன் ரமணி இல்லையா! அவன் கூட்டாளிதான ' என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஐயையோ ரமணியா! அவன் யார்? சத்தியமாகச் சொல்லுகிறேன். அவனே எனக்குத் தெரியவே தெரி யாதே' என்று தேம்பிக் கொண்டே கூறினன் அந்தப் பையன். அவன் கண்கள் பொலபொலவென்று கண் ணிரைச் சொரிந்தன.

இவ்வளவு நேரம் மெளனமாயிருந்த மதுரநாயகம் கீழே குனிந்து அவன் கைகளைப் பிடித்துத் துரக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/54&oldid=808255" இலிருந்து மீள்விக்கப்பட்டது