பக்கம்:பர்மா ரமணி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 r பர்மா ரமணி அப்போது மோகனரங்கம், ாரன் சார், என் கடிகாரம் எங்கே? அதைக் காட்டவில்லையே! என்று கேட்டார். - "இதோ அதையும் தருகிறேன். சொந்தக் கடிகாரம் போல் அதை ஜம்பமாகக் கையிலே கட்டிக்கொண்டிருக் தான் அந்தப் பயல்’ என்று கூறிவிட்டு மேஜை அறைக்குள்ளே கையை விட்டார் சப்-இன்ஸ்பெக்டர். அதே சமயம்-உள்ளே சென்ற போலீஸ்காரர் அடைபட்டிருந்த பையனைப் பிடித்து வந்தார். அவனைப் பார்த்ததும், முதலாளி மோகனரங்கம், 'ஆ யார் இவன்? ரமணி இல்லையே!” என்று கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் உற்றுப் பார்த்தார். மதுரநாயகமும், அடே, இவன் யார்?” என்று சந்தேகத்துடன் அவனைக் கூர்ந்து பார்த்தார். அதற்குள் அந்தப் பையன், 'ஓ' என்று அலறிக் கொண்டே மதுரகாயகத்தின் அருகே ஒடினன்; அவரது கால்களே பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் ! - . உடனே மதுரகாயகம், ஆ! எப்படி இங்கே வந்தாய்’ என்ற திகிலுடன் கேட்டார். 7. யார் அவன்? அந்தப் பையன் பதில் எதுவும் கூறவில்லை; தேம்பித் தேம்பி அழுதான். கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. அவனுடைய கண்ணிர் மதுரகாயகத்தின் கால்களை கனைத்துக் கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/53&oldid=808253" இலிருந்து மீள்விக்கப்பட்டது