பக்கம்:பர்மா ரமணி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்டுக் கொண்டான் 49 கறுப்பு. சேகர் அன்பளிப்பு என்றுகூட இதில் இருக் கிறதே! ஆறு மாதமாக என் வீட்டிலே தின்றுவிட்டு, எனக்கே வேட்டு வைக்கப் பார்த்திருக்கிருனே! அப்பப்பா! நினைத்தாலே வயிறு எரிகிறதே! பட்டுத் துணியைத் திருடின்ை பேணுவைத் திருடின்ை; கடிகாரத்தையும் திருடி வைத்திருக்கிருன் காலைந்து மாதத்துக்கு முன்பிருந்தே அவனிடம் இந்தத் திருட்டுத் தனம் இருந்திருக்கிறதே! இன்னும் என்ன என்ன சாமான்களைத் திருடி வைத்திருக்கிருனே! ஏன் சார், அவனிடம் இந்த இரண்டையும் தவிர வேறு ஏதாவது பொருள் இருந்ததா?’ என்று சந்தேகத்தோடு கேட்டார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், வேறு எதுவும் அவ னிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை, ஒரு வேளை: எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பானே? எதற்கும் அடித்து உதைத்துக் கேட்டால், உள்ளதைக் கக்கி விடுகிருன்’ என்ருர். 'அந்தப் பயல் உங்களிடம் எப்படிஅகப்பட்டான்? என்று கேட்டார் மோகனரங்கம். ஒரு மார்வாரி கடையில் அவன் அந்தப் பேணுவை விற்கப் பார்த்திருக்கிருன். அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் லபக்கென்று அவனைப் பிடித்துக் கொண்டான். பாவம், யாரிடத்திலே தப்பினுலும், போலீஸ்காரரிடமிருந்து தப்பமுடியாது என்பது அவ லுக்குத் தெரியுமா அகப்பட்டுக் கொண்டதும், அவன் ஏதேதோ சொல்லித் தப்பிக்கப் பார்த்திருக்கிருன். விட்டால்தானே போவதற்கு உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவந்துவிட்டார்கள்!' என்று உற்சாக் மாகக் கூறினர் சப்-இன்ஸ்பெக்டர். ぶ - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/52&oldid=808251" இலிருந்து மீள்விக்கப்பட்டது