பக்கம்:பர்மா ரமணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அவன்? 55, "சரி ஆனந்தா, இங்கே வந்ததும், நீ என்ன செய் தாய் ? ஏன் என் வீட்டுக்கு வரவில்லை ? விலாசம் தெரியாதா?’ என்று கேட்டார் மதுரகாயகம். விட்டு விலாசம் தெரியாதபோனல் என்ன ? நாடக சபா பெயர்தான் தெரியுமே! விசாரித்துக் கொண்டு வந்துவிட மாட்டேனு, மாமா ? ஆலுைம் ரயிலை விட்டு இறங்கியதும், உங்களிடம் வர தயக்க மாகவே இருந்தது. நான் ஏன் வந்தேன் என்று நீங் கள் கேட்பீர்கள். கடந்ததைச் சொன்னுல், நான் செய் தது உங்களுக்குப் பிடிக்காது. கோபித்துக்கொள்வீர் கள். ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றி லுைம், ஒன்றிரண்டு நாட்களில் உண்மை தெரிந்து போகும். என்னைக் காணுேமென்று அப்பா உங்களுக் குத் தந்தி கொடுத்துவிட்டால், என் ஏமாற்று வேலை தெரிந்து போகும் ! அப்போது நீங்கள் கோபித்துக் கொள்வதுடன் மறு ரயிலிலே என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுவீர்கள். குஷியாக ஊரைச் சுற். றிப் பார்க்க முடியாது என்றுதான் வீட்டுக்கு வர வில்லை. ரயில் கட்டணம் போக மீதமிருந்த சில்லறை யும் இரண்டு நாளில் கரைந்துவிட்டது. மூன்ருவது நாள்-அதுதான் இன்றைக்குக் காலையிலே பணத் துக்கு என்ன செய்வது?’ என்று யோசித்தேன். உடனே, என் கையிலிருந்த கடிகாரமும், பையிலிருந்த பேணுவும் நினைவுக்கு வந்தன. கடிகாரத்தை விற்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது அப்பா காசு கொடுத்து வாங்கித் தந்தது. அதேைல அதை விற்று விட்டால், அப்பாவுக்கு விஷயம் தெரியும்போது அதிக மாக ஆத்திரப்படுவார். ஆல்ை, பேணு இலவசமாக வந்ததுதானே! அதனுலேதான் அதைக் கொண்டு போய் ஒரு மார்வாரி கடையிலே விற்கப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/58&oldid=808263" இலிருந்து மீள்விக்கப்பட்டது