பக்கம்:பர்மா ரமணி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . பர்மா ரமணி அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரர் வந்து என் னைத் திருடன் என்று நினைத்துப் பிடித்துக் கொண் டார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்க வில்லை. நல்ல வேளை ; மாமா, நீங்களா வது இப்பொழுது வந்தீர்களே 1 இல்லாதபோனல், ஜெயிலிலே கிடந்து செத்தே போயிருப்பேன்’ என்று கண்கலங்கக் கூறினன் ஆனந்தன். -

  • ஆனந்தா, அழாதே! கண்ணேத் துடை. உன் அப்பா எவ்வளவு நல்லவர் ! அவரையே நீ ஏமாற்றப் பார்த்தாய், அதனுல்தான் இந்தத் துன்பமெல்லாம். இனிமேல் இப்படிச் செய்யாதே!’ என்று எச்சரித்தார் மதுரகாயகம்.

'மாமா, சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இனி இப்படிச் செய்யவே மாட்டேன்; செய்ய கினைக்கவும் மாட்டேன்’ என்று உணர்ச்சியுடன் கூறினன் ஆனந்தன். பிறகு மதுரகாயகம் சப் - இன்ஸ்பெக்டரைப் பார்த்து, சார், இவன் கூறியதெல்லாம் உண்மை தான். இவனைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். எல் லாம் அந்த ரமணியால் வந்த தொல்லைதான்!” என்று அலுத்துக்கொண்டார். * . . - போலீஸார் பிடித்துவந்த பையன் ரமணி @cుజు என்று தெரிந்ததும், முதலாளி மோகனரங்கம், கல்ல வேடிக்கை! புலியைப் பிடிக்கப் புறப்பட்டுப் போனவன், எலியைப் பிடித்துக்கொண்டு இறுமாப் போடு வந்தானும்! அந்தக் கதையாகத்தான் இருக் கிறது” என்று கூறிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, சார், அந்த ரமணிப் பயலை விடக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/59&oldid=808265" இலிருந்து மீள்விக்கப்பட்டது