பக்கம்:பர்மா ரமணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடி அறை 57 அவன் மகா அயோக்கியன்! சுலபமாய்க் கிடைக்க மாட்டான்' என்ருர், எஉங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் கூடிய சீக்கிரம் கொண்டுவந்து விடுவோம்' என்று தைரியம் சொன்னுர் சப்-இன்ஸ் பெக்டர் பிறகு மதுரகாயகம் சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்த ஆனந்தனின் கைக்கடிகாரத்தையும், பேணுவையும் வாங்கிக் கொண்டு, நாங்கள் வருகிருேம், சார். கொஞ் சம் கவனம் இருக்கட்டும்” என்று கூறிவிட்டுப் புறப் பட்டார். முதலாளி மோகனரங்கமும், ஆனந்தனும் பின்தொடர்ந்தனர். மூவரும் காரில் ஏறி நாடகக் கொட்டகைக்குச் சென்ருர்கள். அங்கே சென்றதும் முதல் வேலையாகத் திருச்சியி லுள்ள அத்தானுக்கு மதுரநாயகம் ஒரு தந்தி கொடுத் தார். அதில், ஆனந்தன் சென்னைக்கு வந்திருக்கிருன். இன்று இரவே திருப்பி அனுப்புகிறேன்' என்று அறி வித்தார். அறிவித்தபடி, அன்று இரவு வண்டியிலேயே ஆனந்தனை ரயில் ஏற்றி அனுப்பிவைத்தார். 8. கண்ணுடி அறை இரண்டு நாட்கள் எப்படியோ ஒடிவிட்டன. இன் னும் ரமணியைப் பற்றிய தகவலே இல்லை. மூன்ரு வது நாள் கால மணி பன்னிரண்டு இருக்கும். மானேஜர் மதுரநாயகம் நாட்கசபாவை விட்டுப் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/60&oldid=808276" இலிருந்து மீள்விக்கப்பட்டது