பக்கம்:பர்மா ரமணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 - பர்மா ரமணி பட்டார். நேராக எழும்பூரிலுள்ள போலீஸ்.கமிஷனர் ஆபீஸிற்குச் சென்ருர். . - என்ன விஷயம்? ரமணியைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா? அதெல்லாம் இல்லை. சபா விஷய மாகத்தான் அங்கு சென்ருர். நாடக சபாவுக்கு ஒரு வருஷத்துக்குத்தான் முதலிலே லைசென்ஸ் கொடுத் திருந்தார்கள். அதை இன்னுெரு வருஷத்துக்குப் புதுப்பிக்க வேண்டுமென்று பத்து நாட்களுக்கு முன்பு மனுக் கொடுத்திருந்தார் மதுரகாயகம். போலீஸ், கமிஷனர் அநுமதி கொடுத்து விட்டாராம். ஆலுைம்லேசென்ஸ் கைக்கு வரவில்லை அதை வாங்கிக் கொண்டு வரவே நேராகப் புறப்பட்டார் மதுர காயகம், போலீஸ்-கமிஷனர் ஆபிஸின் வெளிவாயிலைத் தாண்டி உள்ளே சென்ருர், சிறிது துரம் சென்றதும், இடது பக்கமாக இருந்த அறை அவரது கவனத்தைக் கவர்ந்தது. அது ஒரு கண்ணுடி அறை. அதன் உள்ளே சைக்கிள், கடிகாரம், குல்லாய், பூட்டு, புத்த கம் இப்படிப் பல சாமான்கள் இருந்தன. அறையின் வெளிப் பக்கத்தில் ஒரு போர்டு தொங்கிக் கொண்டி ருந்தது. அதில் காணுமல் போன சாமான்கள் அறை: என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவர் வழியிலே ஒரு சாமானைத் தவறுதலாகப் போட்டுவிட்டுப் போய்விடுகிருர் என்று வைத்துக் கொள்வோம். அது வேருெருவர் கைக்குக் கிடைக் கிறது. அவர் யோக்கியமானவர். சாமானுக்குச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட நினைக்கிருர். ஆனல், சொந்தக்காரர் யார் என்று தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/61&oldid=808278" இலிருந்து மீள்விக்கப்பட்டது