பக்கம்:பர்மா ரமணி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுடி அறை 59 உடனே பக்கத்திலுள்ள போலிஸ் ஸ்டேஷனில் கொடுத்து அதன் சொந்தக்காரரிடம் சேர்க்கச் சொல்லு கிருர். அங்கிருந்து அந்தச் சாமான் போலீஸ்.கமிஷனர் ஆபீஸிற்கு வருகிறது. அதைக் கண்ணுடி அறையில் வைக்கிருர்கள்; சாமானுக்குச் சொந்தக்காரர். கண்ணில் படவேண்டு மென்றுதான் அப்படி வைக்கிருர்கள். இதே போல், திருடர்களிடமிருந்து பறி முதல் செய்த சாமான்களில் சில இங்கே வருவதும் உண்டு. திருட னுக்கு யாரிடமிருந்து எடுத்தோம் என்பது சரியாகத் தெரியாது. சாமானைப் பறிகொடுத்தவரும் போலீஸில் கரிப்போர்ட் கொடுத்திருக்க மாட்டார். யாரிடம் சாமா னைக் கொடுப்பது? கொடுப்பதற்கு வழி இல்லாததால், அதையும் கண்ணுடி அறையில் வைத்துவிடுகிருர்கள். இப்படிப் பல சாமான்கள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணுடி அறையின் அருகே சென்று ஒவ்வொன்ருகப் பார்த்துக்கொண்டே வந்தார் மதுர காயகம். இருந்தாற் போலிருந்து, ஆ! அதோ இருக்கிறதே என் பேணு' என்று அவர் வாய் விட்டுக் கூறிக்கொண்டே ஆவலோடு உற்றுப்பார்த்தார். ஆம், அது அவருடைய பேணுவேதான் தங்க மூடி போட்டிருக்கிறது. அடிப்பாகம் கறுப்பாயிருக்கிறது. மேலே சேகர் அன்பளிப்பு என்றும் எழுதப்பட்டிருக் கிறது. சந்தேகமே இல்லை. அவருடையதேதான்! அனுல், அது எப்படி அங்கே வந்தது? அதுதான் மதுரநாயகத்துக்குச் சிறிதும் புரியவே இல்லை. கண்ணுடி அறைக்குள் பேணுவைக் கண்டதும் முதலாளியின் கைக்கடிகாரமும் அங்கே இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார் மதுரகாயகம். அது அங்கே இல்லை. கமது பேணு எப்படி இங்கு வந்தது? ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/62&oldid=808280" இலிருந்து மீள்விக்கப்பட்டது