பக்கம்:பர்மா ரமணி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது! 87 கொண்டே தபால் முத்திரையைப் பார்த்தார். தெப்பக். குளம் என்றிருந்தது. உடனே அதை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் ஓடினர். திருச்சியிலிருந்து தான் அவன் இதை எழுதியிருக்கிருன். இதோ தெப் பக்குளம் தபால் முத்திரை இருக்கிறது” என்று: கூறினர். - - - " . . . என்ன அவன் திருச்சியிலா இருக்கிருன்: அங்கே அவனுக்கு யார் இருக்கிருர்கள் ' என்று. வியப்புடன் கேட்டார் மோகனரங்கம். - யோருமே இருப்பதாகத் தெரிவில்லை. உற்ருர் உறவினர் ஒருவருமே இல்லை என்று அவன் அடிக்கடி சொல்லுவானே !' என்று கூறினர் நாடக சபா மானேஜர் மதுரகாயகம். - பின்னே எதற்காக அங்கே போனுன் ? எப்படிப் போயிருப்பான் : ரயிலில் காசு கொடுக்காமலே அவன் போயிருப்பானே...?” - சேச்சே, அப்படி ரமணி ஒரு காளும் செய்யமாட் டான். கடந்தே போனுலும் போவானே தவிர, பிறரை ஏமாற்ற நினைக்கமாட்டான்" என்று உறுதியாகச் சொன்னர் மதுரநாயகம். - 'சரி, சாப்பாட்டுக்கு இத்தனை நாள் வரை என்ன செய்திருப்பான் ? அவனே சிறு பையன். பட்டினி கிடக்க முடியுமா ? ஒரு மணி நேரம் தாமதமானுல்கூட என்னுல் பசியை அடக்க முடியவில்லையே!” 'பாவம், அவன் போய் ஒரு வாரம் ஆகிறதே, என்ன பாடு படுகிருனே! எப்படித் துடிதுடிக்கிருனுே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/90&oldid=808340" இலிருந்து மீள்விக்கப்பட்டது