பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள். எத்தனையோ வசதிக்குறைவுகள் இருந்தும் அவர்கள் தங்களுடைய முயற்சியாலும் துணிச்சலாலும் ஓர் அற்புதமான வாரியத்தை சாதித்துவிட்டார்கள்.

    சான்டோஸ் டுமான்ட் என்பவர் பலூன் விமானங்கள் கட்டிப் பறக்க விடுவதில் பாரிஸில் மிகுந்த புகழ் பெற்றிருந்தாரென்று முன்பே தெரிந்துகொண்டிருக்கிறோம். அவரும் காற்றைவிடக் கனம் அதிகமுள்ள ஆகாய விமானம் கட்டி அதில் பறப்பதில் கவனம் செலுத்தினர்.
   1906-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி அவர் தாம் புதிதாகக் கட்டிய ஆகாய விமானத்தில் பறக்க முயன்றார், அந்த விமானம் அன்று தரையைவிட்டுச் சுமார் மூன்றடி உயரந்தான் மேலே கிளம்பிற்று. மேலும் அது ஒரு நிமிஷங்கூடப் பறக்கவில்லை. ஏதோ சில அடி தூரம் சென்றது. இருந்தாலும் அதுவே ஒரு பெரிய வெற்றிதான். அவர் தமது விமானத்தைச் சீர்திருத்தி மறுபடியும் அக்டோபர் மாதத்தில் பறந்தார். இந்தத் தடவை அது ஆறு அடி உயரம் மேலே கிளம்பி சுமார் 200 அடி தூரம் பறந்தது.
   மறுபடியும் அவர் நவம்பர் மாதத்தில் தமது விமானத்தில் பறந்தார். இந்த முறை விமானம் 15 அடி உயரம் மேலே கிளம்பிப் பறந்தது. சுமார் 250 கஜம் பறந்து அவர் கீழே இறங்கினர்.
   உலகமே அவரைக் கொண்டாடியது. அவர்தாம் முதன் முதலாகப் பறந்தவர் என்று கூடப் பல பேர் கூறினார்கள். ஏனென்றால், அவர் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுப் பல பேர் நன்றாகக் கவனித்துக்கொண்டிருக்கும் போது பறந்து வெற்றியடைந்தார்.
   அதன்பிறகு ஆகாய விமானத்தில் எத்தனையோ அபி விருத்திகள் ஏற்படலாயின. பல தேசங்கள் போட்டி போட்டுக்
                    23