பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 லிண்ட்பெர்க் விமானம்

    இந்த விமானத்தில்தான் சார்லஸ் லிண்ட்பெர்க் என்ற அமெரிக்கர், 1927-ஆம் ஆண்டில் தமது வெற்றியை நிலை நாட்டினர்.அவர் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் தேசத்திற்குத் தன்னங்தனியாக இந்த விமானத்தில் முதன்முதலாக வந்தார். அவர் முப்பத்து மூன்றரை மணி நேரம் பறந்து 3600 மைல் வந்திருக்கிறார். அவருக்குப் பிரான்ஸிலும் இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் பெரிய பாராட்டுகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கான மக்கள் அவரைக் கொண்டாடினார்கள். அமெரிக்காவுக்கு அவர் திரும்பியபோது நடந்த வரவேற்புக்கு இணை கூற முடியாது.
             குண்டு வீசும் விமானம்
   குண்டு வீசும் விமானங்களில் பலவகை உண்டு. சாதாரண விமானத்தைச் செலுத்துவதற்கு ஒருவர் இருப்பது
                       28