பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போலக் குண்டு வீசும் விமானங்களிலும் இருப்பார்கள். ஆனால், இங்கே காட்டப்பட்டுள்ள விமானத்தில் யாரும் கிடையாது. இது தானகவே பறந்து செல்லும். தரையிலே ரேடியோ சாதனம் வைத்திருப்பார்கள். அதன் மூலம் எப்படி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதன்படி இது வெவ் வேறு திசைகளிற் சென்று குண்டு வீசும். ரேடியோ உத்தரவிட்டால் திரும்பி வந்துவிடும். இதுவும் ஜெட் விமானந்தான்.

            யுத்த விமானம்
   இது ஜெட் விமானம். யுத்த காலத்திலே தரையில் போரிடும் படைகளுக்கு உதவியாக இது பயன்படும். இதன் இறக்கைகளின் அடிப்பாகத்தில் ராக்கெட் குண்டுகள் இருப்பதைக் காணலாம். பகைவர்களின்மேல் இவற்றை இந்த விமானம் வீசும். சிறிய எந்திர பீரங்கிகளும் இதில் இருக்கும். இந்த விமானம் மிக வேகமாகப் பறக்கக்கூடியது.
                    29