பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17


உனக்கு எதற்குப் புதுப்பாவாடை யெல்லாம்?? என்று பச்சைமணியின் அம்மா சொன்னாள்.

"அன்று பள்ளிக் கூடந்துக்குப் போன பச்சை மணி முத்துமணியைப் பார்த்து, தவிட்டுப் பிள்ளை! தவிட்டுப் பிள்ளை என்று கேலி பண்ணினாள். இதைக்கேட்டுப் பள்ளிக் கூடத்தில் இருந்த மற்ற பிள் ளைகளும் அவளைத் தெவிட்டுப் பிள்ளை,"தவிட்டுப் பிள்ளை! என்று கேலி செய்தார்கள்.

முத்துமணி பச்சைமணியைப் பார்த்து, நீ ஏன் என்னைத் தவிட்டுப் பிள்ளை என்கிறாய்?’ என்று கேட்டாள்,

"நாங்கள் எல்லோரும் எங்கள் அம்மா வயிற்றில் பிறந்தோம். உன்னை உன் அம்மா பெறவில்லை, ஒரு வண்டி தவிடு கொடுத்து உன்னை வாங்கினாள். அதனால் நீ தவிட்டுப் பிள்ளை!?? என்று சொன்னாள் பச்சைமணி,

உடனே எல்லாப் பிள்ளைகளும் கொல்லென்று சிரித்தார்கள். தவிட்டுப் பிள்ளை! தவிட்டுப் பிள்ளை!?? என்று கத்தினார்கள். முத்துமணிக்கு அழுகை அழுகையாக வந்தது.

கண்ணிர் விட்டு அழுது கொண்டே, அவள் பள்ளிக்கூடம் விடுவதற்கு முன்னால் வீட்டுக்குத் திரும்பி விட்டாள்.

ப-2