பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36

36 9. 'இல்லறம் மேலா அல்லது துறவறம் மேலா" என்று ஒரு முறை சிஷ்யன் கேட்க குருவானவர் அப்ப்ாள்ந்த ஆஸ்ரமத்தில் இருந்த போதிலும் ஒருவன் அந்த ஆஸ்ரமத்தின் விதிப்படி நடந்து வருவாயின் அது மேலாகும். அதைக் கொண்டு முக்தி அடையலாம், திருவள்ளு வர் அறத்தாற்றில் இல்வாழ்க்கை ஆற்றில் புறத்தாற்றிற் போய் பெரு வது எவன் என்று கூறி இருப்பதையும் நீ படித்திருக்கிருய் அல்லவா என்று கூறிமுடித்தார். 10. ஒரு நாள் சிஷ்யன் குருவிடம் போய் ஸ்வாமி கோபத்தை அடக்க வேண்டும், என்று என்க்கு பலதரம் சொல்லியிருக்கிறீர்கள்: ஆயினும் என்னுல் அதை அடக்க முடியவில்லையே, இதற்கு என்ன செய்வது நான் ' என்று கேட்டான். குருவானவர் ' அப்பா நான் இதற்கு ஒரு யுக்தி சொல்லிக் கொடுக்கிறேன், அதன்படி முயன்று பார் - அதாவது, கோபம் வந்த உடனே, யாதும் உமது செயல் என்று ஏழு தரம் சொல்லிவிட்டு பிறகு அந்த கோபம் இருந்தால் உன் இஷ்டப்படிச் செய், நீ ராமாயணம் படிக்கிருயே அதில் ஆஞ்சனேயர் கோபத்தால் இலங்கையை கொளுத்திய பிறகு, அடடா ! என்ன தப்பிதம் செய்தோம் இலங்கையை கொளுத்திய போதே சீதா தேவியையும் கொளுத்தி இருப்போமே!’ என்று வருந்துகிருர் அந்த கட்டத்தை மறுபடியும் படித்துப் பார் என்று உபதேசித்தார். 11. ஒருநாள் சிஷ்யன் தன்குருவைப் பார்த்து-சுவாமி தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், கேட்க எனக்கு உத்திரவு கொடுங்கள் என்ருன் குருவானவர் அப்பா என்ன வேண்டு மென்ருலும் நீ கேட்கலாம் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல் கிறேன் இல்லா விட்டால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு கிறேன், பயமில்லாமல் கேள் ' என்ருர், அதன் பேரில் சிஷ்யன் ‘சுவாமி எல்லோரும் இந்துக்களாயிற்றே நீங்கள் மாதா கோவில்களே பார்க்கும் பொழுதும், மசூதிகளே பார்க்கும் பொழுதும், கையெடுத்து கும்பிடுகிறீர்களே, அது ஏன் அப்படி ? என்று கேட்டான். அதன் பேரில் குருவானவர் "அப்பா உன் கேள்விக்கு நான் பதில் சொல்லு கிறேன், அதன் முன் நான் உன்னை ஒரு கேள்வி கேட்பேன் நீ பதில் சொல் என்று சொல்லி, சுவாமியானவர் எங்கே இருக்கிருர் சொல் என்று கேட்க, சிஷ்யன் பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிருர் என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்களே என்ருன் குருவானர் அதை நீநம்புவதானுல் அந்த பரம் பொருள் மாதா கோயில்களில் இல்லையோ மஹம்மதியர் தொழும் மசூதிகளில் இல்லையோ - நீ சின்னபோது ஒளவையார் கதை ஒன்றைக் கேட்டதில்லையா? ஒளவையார் ஒரு நாள் சுவாமி. கோயிலுக்கு எதிரில் தன்கால்களை நீட்டிப் படுத்தர்களாம்.