உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் அரசியல் அறம் வளர்த்த அறிஞர்பல் லோர்க ளாண்ட சிறப்புமிக் குடைய நாடு சிரசினைக் கொள்கைக் காக வரையற ஈந்தோர் ரத்தம் வடிந்துமண் சிவந்த நாடு நிறைமனத் தரும் தாதா நிலைத்து வாழ்ந் திருந்தநாடு (6) எதற்குமே சட்டம் கண்ட இஸ்லாமி யர்கள் நாடு மதத்துடன் அரசும் ஒன்றாய் வனைந்து சேர்ந்தாளும் கொள்கை உதித்தெழ வைத்த புர்கான்! உருப்பெறக் கண்ட நாடு இதந்தரு ஜம்ஜம் கேணி2 இலங்கிடும் அரபு நாடே (7) ஒட்டகப் பந்த யங்கள் ஓட்டியே மகிழ்ந்த நாடு நெட்டுயர் குதிரை யாலே நீள்புகழ் படைத்த நாடு நட்டுயர் ஈஞ்சி' னாலே நல்வளம் உற்ற நாடு தொட்டுயர் வர்த்த கத்தால் தொல்புகழ் பெற்ற நாடு (8) பெரும்படை தன்னைச் சில்லோர் பேதறப் பொருதி வென்ற அரும்பெரும் சரித்தி ரத்தை ஆரமாய்ப் பூண்ட நாடு கரிதனைக் குருவி கொன்ற காரணம் படைத்த நாடு கரும்பெனப் போரை எண்ணும் காளையர் உடைய நாடு (9) புண்ணிய மேலோர் பாதம் பொருந்திய கீர ணத்தால் மண்ணெல்லாம் மகிமை பெற்று மகிழ்ந்ததன் அடியில் தோண்ட எண்ணெயூற் றிலங்கிப் பொன்னாய் எங்கணும் இலங்கும் நாடு பண்ணிசை யாலே வையம் பாலிக்கும் அரபு நாடே (10) இருபுறம் இரண்டு கண்டம் இலங்கிட நடுக்கண் டம்மாய் திருவுறத் திகழும் நல்ல செம்மைசேர் ஆசி யாவின் சிறப்புறும் தலையாய் நின்று ஜெகமெலாம் அறிந்தோர் தம்மை பொறுப்புடன் தாங்கித் தாங்கி புகழ்குவித் திட்ட நாடு (11) 1. புர்கான் - திருக்குர்ஆன் 2. ஜம்ஜம்கேணி - புனித நீருற்று. 3. ஈஞ்சி - பேரீத்த மரம். 4. கரிதனைக் ....... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப் பதற்கு சுமார் அறுபது நாட்களுக்கு முன்னர் அபிசீனிய அரசரின் பிரதிநிதியாகயிருந்த அப்ரஹா என்பான், யானைப் படைகளுடன் மக்காவை முற்றுகையிட முனைந்தான். அவனுடைய யானை (கரிப்) படைகளை, அகிலாஹ்வின் கட்டளையால் ஒரு பறவைக் கூட்டம் எவ்வாறு அழித்தது என்பதைத் திருமறையின் 105ம் அத்தியாயமான ஸூரத்துல் ஃபீல் கூறுகிறது.