உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் செல்வநற் செருக்கி னாலே சேர்ந்தமாப் பதவி யாலே நல்விதச் செயல் மறந்த நண்பரின் உதவி யாலே வல்லிறை தனக்கொவ் வாதான் மனிதரின் பழிப்பிற் கான பொல்வினை இதனைச் செய்தான் புகழ்ந்தனர் அவனைத் [தோழர்! (19) புகழ்ச்சியால் உணவின் ஊட்டம் புகுத்திய சதைக் கொழுப்பால் அகத்தெழு அகந்தை யால்மேல் அதட்டிக்கேட் பாரி லாதால் மிகப்புதுச் செயலென் றெண்ணி மேவினான் சுறாயிக் தீதில் இகந்தனில் இவனொப் பார்வே றிவையென சரிதம் செப்ப! (20) அறவினை மூடச் செய்கை ஆகுமென் றுரைப்பர் நண்பர் சரதமென் றதனை ஏற்பான் தர்மமாச் சாலை எல்லாம் நெறிகெட மூடி வைப்பான் நேர்மையில் மாற்றம் செய்வான் முறையல ஒழுக்கம் பேணல்; முரண்படு, என்பர் செய்வான்! (21) துறைதொறும் தீமை செய்து துயரிடை மக்கள் வீழ மறையறி வுடையோர் எல்லாம் வருந்திட வைத்தான் சுறாயிக் பறைபட அவனின் தீமை பரவின நாடு முற்றும் சிறகொடி பறவை யென்ன செயலிழந் திருந்தார் மேலோர் ! (22) மக்களை மதியா சுறாயிக் மன்னவன் இன்னும் சற்றே எக்களிப்புடனே மேவி இயற்றினான் சட்டம் ஒன்றை ஒக்கயென் ஆட்சியின் கீழ் ஒருகுறை யின்றி வாழும் தக்கயென் குடிஜனங்காள் சாற்றுவேன் ஒன்று கேண்மின் (23) மன்னவன் எனக்கே இந்த வையத்தின் உடைமை சொந்தம் பொன்னோடு பூமி பெண்கள் போகபோக் கியங்கள் எல்லாம் என்னதே இவற்றில் ஒன்றை ஏற்கநான் விருப்பங் கொண்டால் அன்னதைத் தடுக்க யார்க்கும் அளித்திலேன் உரிமை காண்க (24) எனதரும் சட்டம் ஈதை ஏற்றிட மறுப்போர் சாவர் முன்மிதை அறிவீர் என்றன் முடிவிதில் மாற்றம் இல்லை தனதரும் பொருளைப் பொன்னை தாமனு பவிக்க என்றால் வனிதைய ரோடு நீங்கள் வாழ்ந்திட வேண்டு மென்றால் (25)