{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் நிறைந்தே இருந்தும் தீமை எதையும் நினையான் யூசருகு சிறந்த அவன்தன் உயர்வைக் கண்டு தேசத் தோரில்சிலர் குறையில் நிதியத் தோடு பெண்ணைக் கொடுக்க முன்வருவார் அறைவான் எனக்குத் திருமண ஆசை அடியுடன் இல்லை யென்றே மன்னன் சுறாயிக் தோழ ரோடு மந்திரி யூசருகை தன்னந் தனியே சந்திக் குங்கால் சரசத் துடன் கேட்பான் "உன்னத அழகும் ஒளிசேர் இளமை உடைய நீயின்னும் கன்னியர் உறவைக் கருதா திருக்கும் காரணம் எதனாலே? வேலியே பயிரை மேயும் விதத்தில் விளங்கும் மன்னவனை பேயினும் கொடிய தீமை விளைக்கும் பெருங்குடி கேட்டினனை வாயுரை கொண்டு திருத்த முயலும் வகைபய னற்றதினால் தாயினும் சிறந்த அன்புள அமைச்சன் தனியாய் அழுதனனே ! அழுது பயனிலை அறவுரை பயனிலை அரசன் நிலை மேலும் பொழுதுக் கோர்விதம் பெண்மைச் சுவைப்பில் புதுமை கொள்வதினால் தொழுதும் இறைவன் உடனே ஒருவழி தோன்றச் செயாததினால் அழுதிடும் மனத்தில் ஆறுதல் காண அடைந்தான் கானகமே! (40) (41) (42) (43)