{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் சந்தம் வேறு அந்தக் காட்டின் நடுப்பரப்பை அன்ற டைந்தான் யூசருகு முந்தத் தனது புரவிதனை முடிபோட் டொருமா மரத்தினிடை சிந்தை பொருதக் கட்டியபின் சீலத் தோடுபுற் றரையிற் வந்தே அமர்ந்தான் மனதிலுறும் வருத்தம் போக்க நினைத்தவனாய் (44) குயிலின் பாட்டும் புறாயீட்டம் கூவும் குக்கூ வெனும் ஒலியும் மயிலின் ஆட்டம் தருக்களிடை மலர்ந்து சிரிக்கும் மலர்வனப்பும் அயலி லிருந்து வந்துதனை அணுகிச் சீண்டும் தென்றலுடன் வயணக் காட்டின் நல்லார்ப்பும் வரவேற் றனவாம் யூசருகை ளமை துஞ்சா யூசருகின் இதயம் தன்னை மகிழ்விக்க களப மலரின் வாசனையை கலந்தே தென்றல் வீசியதும் புளகம் அடைய மயில்குயில்கள் பூரித் தாடிப் பாடியதும் தளர்ந்த மனத்து யூசருகின் சஞ்ச லத்தை நீக்கவில்லை (45) (46) அருவி யூற்றின் சலசலப்பும் அன்னம் நீந்தும் தடாகங்களில் மருவி லுயர்ந்த தாமரைப்பூ வண்ணச் செருக்கின் கவர்ச்சியுடன் தருக்க ளிடையே புகுந்துதரை தன்னில் மின்னும் விண்ணொளியும் பெருக்கும் இன்பம் யூசருகின் பிணியைத் தீர்க்க உதவவில்லை (47)