{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
10 பல்கீஸ் நாச்சியார் காவியம் காலம் பகலாய் மாலையெனக் கடுகிச் சென்று கொண்டிருக்க ஞாலம் தன்னை இருள்கவ்வ நாடு கின்ற வேளைவரை சீலம் நிறைந்த யூசருகு சிந்தித் தங்கே வீற்றிருந்தான் சாலச் சிறந்த மாலையதில் சார்ந்த தொருமான் கூட்டமங்கே (48) புள்ளி நிறைந்த மான்கூட்டம் பெருத்த விழிகள் தான் துலங்க அள்ளி அவனை விழுங்குவபோல் அருகில் சூழ்ந்து நோக்கினவே உள்ளி யிருந்த யூசருகின் உணர்வைத் தூண்ட வில்லையவை எள்ளி நகைக்க வாயினவாம் இதுகண் டந்த மான்கூட்டம் மானின் கூட்டச் சிரிப்பொலியா மங்கை யார்தம் சிரிப்பொலியா கான கத்தே தனைச்சூழ்ந்து (49) காணும் அந்தச் சிரிப்பொலிதான் ஆன தெவரால் எனக்காண அதிர்ந்து பார்த்தான் யூசருகு மான்க ளில்லை பெண்களில்லை மாயை யோவென் றெழுந்துநின்றான் (50) தூரத் தேயோர் புதர் அருகே சூழ அந்த மான்கூட்டம் நேரே நின்று யூசருகை நிமிர்ந்து பார்த்து சிரித்ததுவே தார கைகள் உதிர்வதுபோல் பூரிப் போடி ளம்பெண்கள் சரக்கொன் றைப்பூ உதிர்வதுபோல் பொலியக் கூடிச் சிரிப்பதுபோல் (51)