{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் கேட்ட அந்தச் சிரிப்பொலியால் கிளர்ச்சி கொண்ட யூசருகு நீட்டித் தான்தன் இடதுகையில் நிலைத்த வில்லின் நாண்இழுத்து பூட்டி னானே அம்பொன்றை பொருத விடுக்க மான்களின்மேல் 11 நாட்டி னானே பார்வைதனை நகைத்த தந்த மான்களெல்லாம் (52) கூட்ட மாக உருமாறி குமரிப் பெண்கள் வடிவெடுத்து ஆட்டம் ஆடி இடையொடிய அழகு காட்டிப் பேசினவே வேட்டு வன்போல் எமைக்கொல்ல விரும்பும் நீயோ நல்லமைச்சன் காட்டின் அழகைக் காணவந்த கன்னி யாயாம் மான்களல்ல அண்டையுள்ள 'ஜின்' நாட்டின் அழகி யர்யாம் மனிதரல்லர் கண்ட படிக்கே உருவெடுத்தல் கடவுள் அளித்த வரம்எமக்கே உண்டோ அழகில் உன்போலே ஒருவன் இந்த உலகினிலே (53) மொண்டு விழியால் உனதழகை முற்றும் மாந்த ஆசையுற்றோம் (04) சென்று வருக விடைதருவாய் திரும்பத் திரும்ப வந்துன்னை நன்று காண எமக்கென்றும் நல்ல வரந்தான் நீதருவாய் பொன்றா அமரர் அழகினிலும் பொலியும் அழகு கொண்டவனே என்று சொல்லி ஜின்மான்கள் எடுத்த தோட்டமவ் விடம்விட்டே (55)