{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் களைப்பும் இல்லை எனினு மங்கே கட்டுண் டதுபோல் நின்றதுவே அளைந்த மனத்து யூசருகோ அச்சம் மிகவும் கொண்டவனாய் 18 வளர்ந்த குதிரை தனைவிட்டு வாகாய்க் கீழே குதித்தனனே ளந்தென் றல்காற் றப்போதங் கினிமை மிஞ்ச வீசியதே (60) மாலை மாறி இரவுவர வானம் மீது மதியம்வர சோலை யெங்கும் மலர்மணம்தான் தொட்டு மெல்ல வீசிவர காலை முதலாய்க் கவலையுடன் காட்டில் இருந்த யூசருகு மேலில் அலுப்பு மிகுத்துவர விழியைத் தூக்கம் தழுவியதே (61) முன்னம் அறியா அவ்விடத்தில் மூளும் அச்சம் தனைவிடுத்து என்ன செய்கின் றோம்என்னும் எண்ணம் சிறிதும் இல்லாது தன்னந் தனியாய்த் தரையினிலே சாய்ந்து படுத்தான் பசியோடு தன்னை மறந்தான் பசிமறந்தான் சற்றைக் கெல்லாம் தூங்கிவிட்டான் ஜின்கள் நாட்டுச் சிறுதோப்பில் எண்சீர்க்கழிலடிசந்தவிருத்தம் வானகத்தில் புதுநிலவு பவனி வந்தது வண்ணமலர் போன்றுடுக்கள் இறைந்து கிடந்தன. கானஒலி மதுரகீதம் சுமந்து வந்தது கணகணத்து மேளதாளம் முழங்கி யார்த்தன தானதன "வென்றொலித்த தாள வயத்தைத் தழுவிசில கன்னியர்கள் ஆட்ட மாடினர் தேன் அதரச் செவ்வரீகண் மங்கையர் கூட்டச் (62) சிரிப்பின்ஒலி பூங்காமுற்றும் எதிரொ லித்தது (63)