{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
N 14 பல்கீஸ் நாச்சியார் காவியம் நிலவைமிஞ்சி விளக்கொளிகள் எங்கும் ஜொலித்தன நிலந்தெரியா வகையில்பட்டு விரித்தி ருந்தது மலர்க்கொடிகள் தோரணம்போல் பூத்துத் தொங்கின மரத்திலெல்லாம் பழக்குலைகள் கனிந்தி லங்கின உலர்ந்திடாநற் செழுமலர்கள் செடிகளி லெல்லாம் உன்னதமாய் அழகழகாய் மலர்ந்தி ருந்தன அலங்கரித்த விரிப்பின்மீது உணவுப் பண்டங்கள் அருஞ்சுவையோ டுண்பதற்குப் பரப்பி யிருந்தன! வாணவெடி அதிர்வேட்டுகள் முழக்க மிட்டன மத்தாப்புகள் வண்ணவண்ணச் சுடர்கொ ளுத்தின ஆணழகன் யூசருகின் தூக்கங் கலைய அவனருகில் வந்துபெண்கள் குலவை யிட்டனர் பூணணிகள் பூண்டிருந்த அந்த மங்கையர் (64) பொன்மலர்க்கை செண்டவனின் உடலைத் தீண்டினர் காணுவது சுனவோஎன யூசரு குதான் கண்விழித்துச் சுற்றுமுற்றும் உற்று நோக்கினன்! பொன்னிலான மண்டபந்தன் முன்தெ ரிவதும் புதுமையெல்லாம் அதன்எதிரில் நிறைந்தி ருப்பதும் கன்னியர்கள் பொன்னுலகை விட்டு வந்ததாய்க் கருதும்படி அழகழகாய்ச் சூழ்ந்து நிற்பதும் முன்னம்பெரும் கானகத்தில் மான்கள் வடிவில் மேவிநின்ற கன்னியர்கள் அங்கி ருப்பதும் தன்னுடைய கண்களினால் கண்டு பயந்தே தாவியோட யூசருகு மெல்ல எழுந்தான்! மன்னவனே மன்னவனே எங்குசெல் கின்றாய் வந்துபசி தீரஉண வுண்டு மகிழ்வாய் ! அன்னநடை பெண்களெங்கள் ஆட்டம் காணுவாய் அமுது போன்ற எங்களிசை கேட்டு மகிழ்வாய் கன்னியர்கள் தழுவுதலில் கவலை மறந்து (65) (66) காலமெல்லாம் இன்பமோடு இங்கேயிருப்பாய் மின்னல்நிற மேனிகொண்ட கன்னியர் உள்ள மேன்மைமிகு ஜின்னரசன் நாடாம் இதுவே ! (67)