{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் என்றுசொல்லி வட்டமிட்டு அவனைச் சூழ்ந்தே இனிமைகொஞ்ச பேசியவன் தன்னை மெதுவாய் சென்றுணவ ருந்தும்படி கெஞ்சிய ழைத்தார் சிரமம்தீர குளிப்பதற்கு பன்னீர் நிறைத்தார் நன்றுயர்ந்த ஆடை அணி பூணக் கொடுத்தார் .. "நாங்களொன்றும் தீயரல்லர்" என்றே யுரைத்தார் "நன்றுனது நாடுசெல நீநி னைத்தாலும் நாங்கள் உன்னை நிச்சயமாய் அனுப்புவோம்" என்றார்! (68) -123 உன்னழகைப் பருகுவதே எங்களின் நோக்கம் உன்றனுக்கோர் சிறியதீங்கும் நாங்கள் செய்திடோம் ஜின்னரசன் தனைக்காண நீவி ரும்பினும் சிரமமின்றி நாங்களதை நிறைவு செய்குவோம் ன்னுமெதற் காகநீயும் பயமடை கின்றாய் எழிலையெலாம் திரட்டிவந்த வடிவ ழகனே தன்னைவிரும் பாதபேரை வற்பு றுத்துதல் தருமமன்று நாங்களதை நன்க றிகுவோம்! . 69) எனவுரைத்த ஜின்குலத்துக் கன்னியர் தம்மை ஏறெடுத்துப் பார்த்தனனே யூச ருகுதான் புனலிலுறும் மீன்களென்ன கண்கள் படைத்த பெண்களெல்லாம் தனைவியந்து பார்ப்ப தறிந்தான் அனலிலிடு மெழுகாமென உள்ளம் பதைத்தான் அவ்விடம்விட் டோடமுடி யாமல் தவித்தான் வனத்தில்தமைக் கண்டுநகைத் திட்ட பெண்களை மருட்சியுடன் சுட்டெரிப்பான் போன்று நோக்கினான்! இந்தவேளை தன்னிலவன் வயிறு பசியை எழுப்பிமிக வேதனைதான் செய்ய லாயிற்று சுந்தரமாப் பெண்களின்மேல் சென்ற பார்வையை திருப்பியேதான் அன்னத்தட்டின் மீதுற விட்டான் அந்தநல்ல வாய்ப்புதனை ஜின்குலப் பெண்கள் அகலவிட்டி டாதுபற்றி அரிய உணவை தந்துண்ணச் செய்துநன்றாய் உபச ரித்தனர் (70) தட்டமுடி யாப்பசியால் உண்டு தீர்த்திட்டான் ! (71)