{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பாராட்டுரை உலகெலாம் எழுந்துள்ள எல்லா மொழி இலக்கியங் களிலும் காவியம் உயர்ந்த சிறப்புடையது, என்றும் நின்று நிலவுந் தகையது. கற்பவர் இதயங்களைக் கவரும் தன்மை யது. தமிழ் இலக்கிய உலகில் காவிய காலம் என்றே ஒரு கால கட்டத்தை வரலாற்றாசிரியர் வரையறுத்து வைத் துள்ளனர். இளங்கோவைப்போல், திருத்தக்க தேவரைப் போல், கம்பரைப்போல் காவியப் புலவர் தமிழ் மொழிக்கு என்றும் சிறப்புச் செய்து கொண்டிருப்பர். அவர்கள் இறவாப் புகழுடையர். அவர்வழி வந்த புலவர்கள், கவிஞர்கள் பலர். உமறுப்புலவர் ஓர் உயர்புலவர், வீரமாமுனிவர் செந்தமிழ்ச் சிந்தனை சிதறாப் புலவர். . இது-இருபதாம் நூற்றாண்டு - காவிய காலமன்று. இருப்பினும் முன்னர்த் தோன்றிய இஸ்லாமியக் காப்பியங் களைப் பதிப்பிக்கின்ற காலம், பாராட்டுகின்ற காலம். இக்காலத்தில் காவியம் படைக்க வேண்டுமென்னும் வேட்கை ஒரு கவிஞர்க்குப் பிறப்பதே சிறப்புக்குரியது. அவர் அதற்குச் செயலாக்கம் கொடுப்பது போற்றுதற் குரியது.அத்தகு சிறப்புக்குரிய - போற்றுதற்குரிய-நற்றமிழ்ப் பணியினை நம் கலைமாமணி கவி கா. மு. ஷெரீப் அவர் கள் செய்துள்ளார்கள். "பிறை” என்னும் இதழில் வெளிவந்த கவிதைகளில் காவியத்தை மூன்று அங்கங்களாக முடிக்க முனைந்திருக் கின்றார் கவிஞர். ஆயின், உங்கள் கரங்களில் தவழ்வது