{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
முதல் அங்கம்தான். பிற இரண்டு அங்கங்கள் பின்னர் வரும். பிறை, வளர்பிறையாக முழுநிலவாக முகிழ்த் திடும்! ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பார்கள். முதற்பாகத்தில் முந்நூற்றிரண்டு முத்தான பாடல்கள் உள்ளன. விருத்தமெனும் ஒண்பாவில் தம் முத்தமிழ் வித்தகத்தையெல்லாம் கவி கா.மு. ஷெரீப் விரித்து வைத் துள்ளார். ஓசை நயத்துக்கென, உவமைச் சிறப்புக்கென சொல்லோட்டத்துக்கென சுவைப்பாங்குக்கென முறை படிக்கத்தக்க பாடல்கள். பல காவியம், நாட்டு வருணனையோடு தொடங்குகின்றது. "உலகிதன் நெஞ்ச மென்றே உரைப்பதுண் ... டரபி யாவை 3 கம்பரைப்போல், சேக்கிழாரைப்போல் கவி, காவியத்தைத் தொடங்குகின்றார், உலகமெனும் சொல்லாலே! அது மங்கல்ச் சொல் என்பர். எழுபத்தெட்டாண்டுகளை எட்டிவிட்ட நம் கவிக் கிழவர் இன்பச்சுவையை இன்றும் எத்துணை நயத்தோடு பாடுகின்றார்: தலைவி பூப்பெய்திவிட்டாள். பண்பார்ந்த பாட்டு வருணனையைப் பாருங்கள். 'கரும்பிலே இனிப்புப் போல கனிகளில் சுவையைப் போல அரும்பிலே மலர்ச்சி போல அதனிடை மணத்தைப்போல வரும்புது வசந்த கால மலர்ச்சியின் பொலிவைப் போல பெரும்புகழ் உமையிரத் தென்பார் பெண்பெறும் பருவம். பெற்றாள்" ஓசை நயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. "மானும் மயிலும் மகிழ்ந்தாட மஞ்சம் மீது கிளிபாட தானும் தனது தோழியரும் தங்கிப் பூங்கா மாளிகையில்