{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் மண்ணி லுள்ளவர் வியந்திட நம்மவர் மகிழ விண்ண திர்ந்திட முரசறைத் தியம்பிட விடுமின் வண்ண வேலைசெய் பவர்தமை யும்வர வழைமின் பண்ணி சைப்பவர் பாவலர் தமக்கெலாம் பகர்மின் 47 (214) பகரும் ஊரவர் தமக்கெலாம் அரண்மனை படைக்கும் நிகரில் உணவுடை நித்தமும் உண்டென நிகழ்த்தி நகர வீதிகள் எங்ஙணும் காவணம் நடவும் சிகர மீதெலாம் ஒளிவிளக் கிலங்கவும் செய்மின் (215) இற்றை நாள்முதல் இனிநாம் எடுத்துமே லியம்பும் அற்றை நாள்வரை எவர்மனை தன்னிலும் அடுப்புப் பற்ற வைத்திடப் படாதெனும் எம்முரை பகர்மின் உற்றே யாவரும் திருமணப் பணிசெய உரைமின்" (216) என்று செப்பிய அரசுரை தமையமச் செடுத்து நன்று கூறிடும் நாவினன் தம்மிடம் நவில குன்று போல்கூன் முதுகுள ஒட்டகம் கொணர்ந்து வென்றி மாமுர சேற்றிய றைந்தியம் பினனே (217) கேட்ட ஜின்னினம் யாவும் மகிழ்ந்தன கிளர்த்தே பாட்டி சைத்தன பாங்குடன் ஆடின பரிவாய் கூட்ட மிட்டன கோதைதம் திருமணம் கூறி ஏட்டி விலாவகை எழில்பு துக்கின எங்கும (218) அணிகள் செய்தன, ஆடைகள் செய்தன அனைத்தும் தணிவி லாதுயர் தரத்தில் அமைந்திடத் தமது பணியைக் கவனமாய் செய்தன விழிப்புடன் பார்த்து கணித்து ரைக்கொணாக் காரியம் செய்தன கடிதில் (219) எங்கும் மணவிழா என்பதாய் நகரினை இனிதாய்ப் பொங்கும் பேரெழில் பூத்திடச் செய்தன பொலிவாய் தங்க மாமணி தாங்கிய காவணம், தரளம் ம் தொங்கும் தோரண வாயிலும் சொலித்தன சுடரால் (220)