{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
48 பல்கீஸ் நாச்சியார் காவியம் எண்சீர்சந்தவிருத்தம் பலமலர்கள் பூத்தபுதுப் பொழிலைப் போன்றும் மதுமலர் நிறைந்தஎழில் தடாகம் போன்றும் நிலவொடுதா ரகைகள்நிறை வானம் போன்றும் நெடுவீதி எங்கணுமே மேன்மை ஓங்க கலைபூத்த காவணத்தின் விதானம் தன்னை கவினுறவே செயஎண்ணி கைவி னைஞர் விலைமதிப்பிற் கடங்காத மணிகள் கொண்டு மிகுத்தொளிரும் விதத்தினிலே அழகு செய்தார் பலகனிகள் பழுத்தநறுஞ் சோலையொப்ப பந்தலிரு மருங்கினையும் அமைத்திட்டார்கள் அழகுநிறை சித்திரங்கள் வரையப் பெற்ற அரியபெருங் கம்பங்கள் தரையி விட்டார் குலைசாய்ந்த வாழைமரம் வாயில் தோறும், (221) கோதறுவா சனைப்பொருள்கள் எவ்வி டத்தும் அலைபாயும் கடலைப்போல் மக்கள் வெள்ளம், அனைவருக்கும் உயர்உணவோ டுறங்கு தற்கு (222) பஞ்சணைகள் விரித்திருக்கும் நெடிய கூடம் பரிவுடனே உபசரிக்கச் சார ணர்கள் செஞ்சொல்உரைப் பெரியோரின் வரவேற் புக்கள் சிறுவர்களின் குற்றேவல் சீர்மைத் தொண்டு விஞ்சையரின் இசைவிருந்து வீதி தோறும் தேவியெழும் பல்லியத்தின ஆர்ப்பி னூடே அஞ்சுகமாம் உமையிரத்தை மணப்ப தற்காய் அரிய எழில் யூசருகு பவனி போந்தான் (223) கொண்டலிடைப் பூத்தெழுந்த மதியம் போன்ற குளிர்முகத்தான யூசருகின் பவனி தன்னைக் கண்டவர்கள் இவன் அழகே அழகென் றார்கள் காளையிவன் மானுடனா? என்றுங் கேட்டார். கண்டுநிகர் மொழியுடைய உமையி ரத்தாள் காத்திருந்த தொன்றும் வீண் போக வில்லை அண்டரினும் மேலான அழகு நல்லான் அவனியிலே இவளுக்காய்ப் பிறந்தா னென்றார் (224)