{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் புரவிமிசை நிலவொன்று போகு தென்பார் பொங்குகடல் நித்திலத்தின் வடிவீ தென்பார் திரண்டெழுந்த புண்ணியத்தின் உருவம் ஈதோ சித்திரத்தில் உயிர்புகுத்தி விட்டார் தாமோ? இரவிஇவ னாகியிங்கு வந்த தோநல் லெழிலெல்லாம் ஒருங்கிணைந்தே இவனா யிற்றோ? தரத்திலுயர் தங்கமிவன் மேனி கண்டே தரையினடிப் புறத்தோடி ஒளிந்த தென்பார் ஆடைஎழில் தனைநோக்கி வியப்பார் சில்லோர் அணிமணியின் ஒளிகண்டு மலைப்பார் சில்லோர் ஈடிணைதான் இவனுக்கிலை என்பார் சில்லோர் இவன் அவளுக் கேற்றவனே என்பார் சில்லோர் மாடிமிசை மருங்கின்மிசை வீடு தோறும் மருக்கமழும் மலர்தூவி நிற்பார் சில்லோர் நாடிநம துமையிரத்தை மணக்க வந்த நம்பியிவன் வாழ்கவென உரைப்பார் சில்லோர் இவ்வாறாய் மக்களெல்லாம் மகிழ்ந்து ரைக்க இனிதாக யூசருகு பவனி வந்தான் அவ்வேளை அரண்மனையில் உமையி ரத்தை அவளுடைய தோழியரும் உற்றோ ரும்மாய் செவ்வியுற அலங்கரிக்க எண்ண மிட்டார் செழுமணத்துப் பன்னீரில் குளிக்க வைத்தார் எவ்விடத்தும் கிட்டாத ஆடை ஆங்கே 49 (225) (226) எண்ணரிய பலவண்ணத் திருந்தும் கூட (227) நெருப்பாலே ஆனஉமையி ரத்தாள் தன்னை நிலவொளிபோல் இலங்குமுயர் ஆடை கொண்டு திருப்போலே அலங்கரித்தார் மரக தத்தால் செய்தஉயர் ஆசனத்தே அமர வைத்து! இருப்பதிலே மிகச்சிறந்த அணிக லன்கள் எடுத்தவளின் நிறம்பொருந்த அணிவித் தாரே இருட்டறையை ஒளியாக்கும் அவளு டம்பிற்(கு} இனித்தேவை இல்லைஅலங் கார மென்று (228)