{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
50 பல்கீஸ் நாச்சியார் காவியம் பூச்சூடி மையெழுதி புருவ வில்லைப் பொலிவாக்கிக் கண்ணம்பைக் காணும் போதே பேச்சின்றி யூசருகு சரண டையும் பெற்றியதாய்ச் சுருமாவைப் பொருந்தத் தீட்டி மூச்சுகுத்துப் பெண்களும்மே பார்த்து வக்கும் மின்னற்கொடி உமையிரத்தை அன்னம் போன்றே ஏச்சறியாத் தோழியர்கள் மகிழ்ச்சி மேவ இட்டுவந்தார் வாழ்த்தொலித்து மணமே டைக்கு (229) தங்கத்தால் மதிளமைந்த அரண்ம னைக்குள் தரளத்தால் அமைந்துள்ள மேடை யின்மேல் மங்காத மரகதத்தால் விதான மிட்டு வைரத்தால் கால்நட்டு மாணிக் கத்தால் பொங்குமெழில் தோரணங்கள் வதியச் செய்து போதுகளாய் நீலமணி பொதித்தி லங்கும் மங்களமா மேடைமிசை மதியோ டிரவி வந்ததென மணமக்கள் வந்த மர்ந்தார் கலி விருத்தம் மறைவல் லுனரும் மதிவல் லுனரும் (230) நிறையுஞ் சபையில் நியகி வழுவா முறையில் பெரியோர் சரியாய் நெறியாய் உறுநிக் காஹ்வை உயர்வாய் முடித்தார் (231) கடலும் நிலவும் மலையும் கதிரும் உடுவும் உயர்வான் உளநாள் வரையில் கடிமா மலரும் மணமும் எனவே நெடுநாள் உலகில் நிலையாய்ப் பொலிவாய் (232) தகவோர் உறவும் தருமா மனமும் புகழிற் குரிய மகவும் மனையும் சுகமும் பெறுக" எனநல் லோர்கள் புகன்றார் இறையைத் துதித்தே வாழ்த்து. (233) மகளிர் வாழ்த்தும் மறையோர் வாழ்த்தும் பகரற் கரிய பண்புளோர் வாழ்த்தும் இகமறி கவிஞர் இன்னுரை வாழ்த்தும் மகிழப் பெற்ற மணத்தம் பதிகள்
- நிக்காஹ் - திருமணம் அரபிச்சொல்
(234)