உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் 51 தோழியர் சூழச் சுகந்தம் சூழ வேழமும் பிடியும் எனநன் கிணைந்து தாழா இன்பம் தகவுடன் காணச் சூழும் நினைவுடன் சேர்ந்தனர் மணவறை (235) அரசனும் அரசியும் மகிழ்வில் திளைத்திட புறமுள யாவரும் பூரிப் படைந்திட தருமுயர் இன்பம் தந்தும் பெற்றும் திருமணத் தம்பதி நலத்தில் தோய்ந்தார் (236) காலம் நடந்தது யூசரு கானவன் கோல ஜின்னெடுத் தேகிக் கொணர காலையில் சபாநா டடைந்தங் கிருந்து மாலையில் ஜின்நா டடைவான் மகிழ்வாய் (237) ஜின்நா டடைந்ததை திருமணம் நடந்ததை தன்னை யன்றி நண்பனும் அறியாத் தன்மையில் காத்தான் தனது மன்னனை எண்ணி அஞ்சி இதயம் நொந்து (238) பதவியைக் காத்தான் பழுதறு செயலால் இதந்தரும் மனைவியோ டினிதாய் வாழ்ந்தான் அதிமது ரச்சொல் உமையி ரத்தாள் மதிமுக எழிலுரு யூசரு குடனே (239) குயிலும் குரலும் எனுமாப் போன்றும் மயிலும் சாயலும் ஆன தன்மையில் நயமொழி புகன்றும் இனிதுற நடந்தும் மயல்தரு பெண்ணினம் முழுமையும் வியக்க (240) இருவர் என்னும் எண்ணம் இழந்து திருவுடைக் கணவன் தானும் தானும் ஒருமனப் பட்ட அன்பில் கலந்து மறுவறு வாழ்வு வாழ்ந்தாள் உயர்வாய் (241) திருமண மாகியோ ராண்டு தீருமுன் அருமன உமையிரத் தடைந்தனள் கர்ப்பம் நறுமன யூசரு கென்னும் நம்பியின் தருமனம் இன்பமே தாங்கித் தழைத்தது (242)