உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

52 பல்கீஸ் நாச்சியார் காவியம் இன்பமே கொண்டனர் கேட்ட வளவரும் இன்பினி லாழ்ந்தனர் அரசி யரசனும் இன்ப விழாஜின் நாட்டிடை வீறுடன் துன்னி எழுந்தது தூய தன்மையில் (243) அரண்மனை தன்னிலே அன்ன மளிப்புடன் பெரும்பணம் அணிமணி பிறவும் பெட்புற வருந்தி யழைத்து வாரி வழங்கினர் பெறுபவர் எவர்க்கும் பேத மின்றி (244) கீத ஒலிப்புகள் கிளர்வெடி யோசைகள் வேத முழக்குகள் வித்தகர் பேச்சொலி போதம் பிறங்கொலி பெண்களின் வாழ்த்தொலி நாத நயப்பொலி நாடெலாம் ஆர்த்தவே. (245) ஏழு திங்களில் எழுந்த விழாஒலி தாழா தையிரு திங்கள் நிறைந்து ஞாலம் வியந்திட நான் அருளிய சீல மகப்பே றுறும்வரை நீண்டது (246) உமையிரத் தென்னுநல் லுத்தமப் பெண்கொடி இமையவர் நாட்டுறும் ஏந்திழை தம்மிலும் கமைதரு சிசுவெனக் காண்பவர் கூறுமா(று) அமைவுரு மகவீந் தகமகிழ் வுற்றனள் (247) மதியின் குஞ்சென மாமயில் பேடென புதிய சூரியப் பிஞ்சென மின்னென விதியவ னித்திரு மகவினை யீந்ததாய் அதிசயித் துரைத்தனர் பார்த்தவர் யாவரும். (248) பிறந்த தினவிழா பிறங்கிற் றூரெலாம் சிறந்த கவிஞர்தம் சீர்தவழ் வாழ்த்துக்கள் அருந்த வத்தினர் அன்பு ஆசிகள் பொருந்த வழங்கினர் புகழ்பட நாளெலாம் (249)