உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

$8 பல்கீஸ் நாச்சியார் காவியம் மூளும்மன ஆசைதனை நானும்மிடஞ் சொல்ல நாளும்நினை வாவேனதை நாவோசொல் வொட்டாத் தாழநினை வாலேயினித் தாங்காதெனக் கண்டேன் ஞாலம்புகழ் தந்தாயெனக் காருன்றனை யல்லால்? (278) தாயாரிலை இவ்வூரினைத் தாண்டிப்பிரி தெங்கும் சேயாகிய நான்சென்றது மில்லையத னாலே ஓயாதென துள்ளமுன தூர்சென்ற தைக்காண மாயாநினை வாலே அன லாகுந்துயர் தீர்ப்பாய்" (273) என்றேமிக அன்போடினி தாக அழ காக நன்றேயுரை செய்தாளுயர் பல்கீசெனும் பெண்ணாள் குன்றாஎழில் கோதையுரை கேட்டே அவள் தந்தை ஒன்றாமனங் கொண்டான்பதில் சொல்லாநிலை நின்றான் வேறு சந்தம் தன தானன தனனா தன தானன தனனா (274) அருள்கூடிய செயலும் அறிவோடுறை மனமும் இருள் நீங்கிய தெளிவும் இதமேவிய உரையும் பொருளாகிய இறையை தொழுதேத்திடுங் குணமும் பெருமாநிதி யெனவே உடையோனூ சருகான் (275) எனும்பேரினைப் பெற்றும் எனதாருயிர் மகளின் நினைவேறிய ஆசை தனைத்தீர்த் திடும்வலிமை தினையாயினு மில்லா நிலையெய் திடலானேன் வினைதீதுள் சுறாயிக் கெனும்பாதகன் செயலால் (276) இதையென்மக ளிடத்தி லெடுத்தெவ்வித முரைப்பேன்? மதிமிக்கவ ளன்னாள் மறைத்தோதுதல் தீதாம் எதுநேரினுஞ் சரியே செயல்தீதுள மன்னன் பதியேகுதல் ஆகா தெனுமுண்மையு ரைப்போம் (277) எனயெண்ணினன் துணிவை வரப்பண்ணினன் இறையை மனதுள்ளினன் அறிவைப் பதம்பண்ணினன் வருதல் வினை நண்ணினன் மகளை விழித்துன்னினன் சொற்கள் தனைச்சொல்லிடக் குரலைச் சரிபண்ணியு ரைத்தான் (278)