உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் காவியம் பொலிவுதர ஆசிரியர் போதம்தர கிளிகள் 87 பேச்சுந்தரக் குயிலுக்குநல் லிசைதந்தாள் நன்கு நிலவுவந்தே முகம்பார்க்கும் கண்ணாடி வதனம் நீள்உடுக்கள் நாணுகின்ற பல்லழகுச் செல்வி விலையுயர்ந்த வைரம்போல் ஒளிபடைத்த கண்ணாள் வீசுகின்ற இளந்தென்றல் போல் நடக்கும் பாவை அலைகளெனக் கூந்தலுள்ள அன்புருவ அன்னம் அமருலகப் பெண்ணொத்த பல்கீசுப் பெண்ணாள்! (266) சந்தக் கலி விருத்தம் தானா தன தானா தன தானா தன தானா பொன்னோ புதுப்பூவோ நவம்பேணும் மணிப்பொலிவோ? மின்னோ பதினாலாந்தின் மீதே யெழு நிலவோ துன்னு மயிலாமோ கலைதானோ குயில்பேடோ? என்னேயிவ ளின்பேரழ கென்றேயுல குரைக்க குன்றா அறி வோடும் நயங் கூடுமழ கோடும் பொன்றா அறத் தோடும்நலம் போற்றுமனத் தோடும் நன்றேபுகல் பல்கீசெனும் நங்கைசெழிப் போடு (267) மன்றல்மணம் காணும்வய தானாள்உயர் வானாள் (268) தன்நேரிலா பல்கீசினை தாரம்எனக் கொள்ள வந்தார்பல மாவீரரும் மாமேதையு மானோர் அன்னார்தமை பெண்ணாள்மன மொவ்வாததி னாலே அன்னாளருந் தந்தைமனம் நொந்தான்உடல் வெந்தான் (269) இன்னாளினில் பல்கீசெ னும்நன்மாமணிப் பெண்ணாள் "என்னாருயிர் தந்தாயென துள்ளத்தொரு ஆசை பன்னாளுள தென்றாளவள்! சொல்லென்றனன், தாதை தன்வாசகம் கேட்டேமனத் துள்வாசகஞ் சொல்வாள்

(270) நும்மூரினை நான்காணவும் நும்மோர்களை யெல்லாம் எம்மோரென யான்பேணவும் எண்ணம்மிகக் கொண்டேன் அம்மாநினை வென்நெஞ்சினில் ஆறாய்க்கட லாக வம்பாயெழ நான்மூழ்கிடர் வாதைப்பட லானேன் (271)